செய்திகள் :

Vijay: தவெக மாநாடு; ``உங்களுக்காக எங்களிடமிருந்து..." - வாழ்த்தும் இயக்குநர் வெங்கட் பிரபு

post image

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் திட்டமிட்டிருக்கிறார். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தொண்டர்கள் அன்னதானம் வழங்குவது தொடங்கி, மாநாட்டுக்காக பேருந்து முன்பதிவு செய்வதுவரை அனைத்திலும் தீவிரமக ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையில், த.வெ.க-வின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன்.

முன்னதாக திருமாவளவன், ``நடிகர் விஜய் கட்சி தொடங்கி முதல் முயற்சியாக மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார். அந்த மாநாடு வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு தன் எக்ஸ் பக்கத்தில், ``விஜய் அண்ணா நீங்கள் எப்போதும் எங்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகவே இருக்கிறீர்கள். உங்களின் இந்த மிகப்பெரிய அரசியல் பயணத்துக்கு வாழ்த்துகள். உங்களுக்காக எங்களிடமிருந்து..." எனப் பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கோட் படத்தின் விசில் போடு பாடலில் நடிகர் விஜயின் படங்கள் எடிட் செய்யப்பட்ட வீடியோவை வெளிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`சரஸ்வதியை வணங்கிவிட்டு படித்தால்..'- ஆளுநர் ரவி பேச்சு; அரசியலமைப்பை சுட்டிக்காட்டிய அன்பில் மகேஸ்!

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரியை விட்டு பாடப்பட்டது சர்ச்சையானது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ள... மேலும் பார்க்க

வடலூர்: அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கிறது வள்ளலார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய ஞானசபை. `வள்ளலாரின் கருத்துகளை பரவலாக்கும் விதமாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்’ என்று, 2021 சட்ட... மேலும் பார்க்க

`எதிர்ப்பதாக இருந்தால் நேரடியாக கூறுங்கள்.. விஷத்தை ஏற்றாதீர்கள்' - திருமாவளவனுக்கு அதியமான் மெசேஜ்

ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கோவை பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்ப... மேலும் பார்க்க