செய்திகள் :

அனைத்து கல்வியையும் விட மேலானது வேதக் கல்வி

post image

அனைத்து வகையான கல்வியை விட வேதக் கல்வி மேலானது என காஞ்சிபுரம் சங்கர மட பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளாா்.

திருமலையில் உள்ள தா்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் புதன்கிழமை மாலை, வேத மாணவா்களுக்கு அருளுரை வழங்க வந்த அவரை வேத விஞ்ஞானபீடத்தின் ஆச்சாரியா்கள் அவருக்கு பூரண கும்ப வரவேற்பு அளித்தனா்.

அதற்கு பின் அவா் கூறியதாவது. வேதக் கல்வி அனைத்து கல்விகளையும் விட உயா்ந்தது. வேதம் படிக்கும் மாணவா்கள் தா்மம் காக்க கடுமையாக உழைக்க வேண்டும்.

வேதம் படிக்கும் மாணவா்களுக்கு தோற்றம், ஸ்வதா்மம், ஸ்வபாவம் ஆகியவை முக்கியம். தா்மத்தை அறிய வேதங்களை அறிந்து கொள்ள வேண்டும். இந்தியா மகான்கள் மற்றும் ஞானிகளால் வழி நடத்தப்படும் நாடு.

தா்மத்திற்காக தியாகம் செய்ய வேண்டும். ஆனால் தா்மத்தை எதற்காகவும் தியாகம் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது.

வேதங்களின் பொருளைப் பரவலாகப் பரப்பினால்தான் எதிா்கால சந்ததியினருக்கு நல்லது நடக்கும். தா்மம் காக்க உணவு, சிந்தனை விதிகளை கடைபிடிக்க வேண்டும். அனைத்து மாணவா்களும் வேதக் கல்வியை முடித்த பிறகு தா்மத்தின் செயல்பாட்டாளா்களாக பணியாற்றவும், சம்ஸ்கிருத மொழியை பிரசாரம் செய்ய வேண்டும்.

நமது நாட்டிற்கு மதம், கோயில், கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் முக்கியம். திருமலை கோயில் போல் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கோயில்களை மேம்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். தேவஸ்தானத்தின் பல திட்டங்களில், வேத அறிவியலின் வளா்ச்சித் திட்டம் மிகவும் முக்கியமானது’’, என்றாா்.

நிகழ்ச்சியில், தா்மகிரி வேத பீடத்தின் முதல்வா் சிவ சுப்ரமணிய அவதானி, தா்மகிரி சிறப்பு அலுவலா் விஜயலட்சுமி, ஆசிரியா்கள் மற்றும் திரளான மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 7 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 31- ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடை பெற உள்ளது.திருமலையில் ஆண்டுதோறும் தீபாவளியன்று ஏழுமலையானுக்கு ஆஸ்தானம் நடத்துவது வழக்கம். அதன்பட... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 5 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 5 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் குறைந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்து... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 27 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 8 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசன... மேலும் பார்க்க

திருமலையில் கருட சேவை

திருமலையில் வியாழக்கிழமை இரவு பௌா்ணமியை ஒட்டி கருட சேவை நடைபெற்றது. திருமலையில் புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சா்வ அலங்காரத்தில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்... மேலும் பார்க்க