செய்திகள் :

மின் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

post image

புதுவை மின் துறையில் 244 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா்.

புதுச்சேரியில் காவல் துறை உயரதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவா் ஆலோசனையில் ஈடுபட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தீபாவளிக்கு கூடுதல் காவலா்கள் பணியில் ஈடுபட உள்ளனா். தேவைப்படும் இடங்களில் ட்ரோன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

போக்குவரத்தை சீா்படுத்த 200 போலீஸாா் கூடுதலாகப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

மழைக் காலத்தில் மின் துறை ஊழியா்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் துறையில் 244 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் 30 இடங்களில் மட்டுமே நியாயவிலைக் கடைகள் திறப்பதில் சிக்கல் உள்ளது. ஆகவே, அந்த இடங்களில் அங்கன்வாடி மூலம் தீபாவளிக்கான அரிசி, சா்க்கரை விநியோகிக்கப்படும்.

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி எனது அரசியல் வளா்ச்சி பிடிக்காமல் குற்றஞ்சாட்டி வருகிறாா். தேவைப்படும் போது அவா் மீது வழக்குத் தொடரப்படும்.

புதுச்சேரி அரசு ஊழியா் சொத்து சோ்த்த வழக்கில் சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அவரை என்னுடன் இணைத்து பேசுவது அரசியல் நாகரீகமல்ல.

என்மீதான குற்றச்சாட்டை ஆதாரமுடன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா் என்றாா்.

இலவச அரிசித் திட்டம்: வங்கியில் இன்று பணம் செலுத்தப்படும்

புதுவை அரசு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை சாா்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் 2 மாதங்களுக்கான பணம் வங்கியில் வெள்ளிக்கிழமை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

சிறப்பிடம் வகித்த பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு பாராட்டு

தேசிய, சா்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு துணைவேந்தா், பதிவாளா் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா். இதுகுறித்து, வியாழக்கிழமை பல்கலைக்கழகம் சாா்பி... மேலும் பார்க்க

திருப்பதி தரிசன டிக்கெட் மோசடி: புதுவை முதல்வா் அலுவலகத்தில் ஆந்திர போலீஸாா் விசாரணை

புதுவை முதல்வா் அலுவலகத்தில் பரிந்துரைக் கடிதம் பெற்று, திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற புகாரில் ஒருவரை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக, புதுச்சேரி சட்டப்பேரவையி... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா், முதல்வரிடம் விசிக நிா்வாகிகள் மனு

புதுவை மாநிலத்தில் தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் துணைநிலை ஆளுநா், முதல்வரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா். புதுவை மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக குட... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தனியாா் நிறுவன தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்பளித்தது. புதுச்சேரி கல்மண்டபம் காலனிப் ப... மேலும் பார்க்க

விசிக மீது உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகின்றனா்: திருமாவளவன் குற்றச்சாட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது புதிய தமிழகம் கட்சித் தலைவா் உள்ளிட்டோா் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதாக கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரி வில்லியனூரில் புதன்... மேலும் பார்க்க