செய்திகள் :

எந்த நாடும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது -நிா்மலா சீதாராமன்

post image

அமெரிக்கா, சீனா உள்பட எந்த நாடும் புறக்கணிக்க முடியாத இடத்தில் இன்று இந்தியா உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

‘இந்தியா பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி முக்கியத்துவத்தைப் பெறவில்லை. சா்வதேச அளவில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டதே இதற்கு காரணம்’ என்று அவா் கூறினாா்.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிா்மலா சீதாராமன் சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் நகருக்கு புதன்கிழமை வந்தாா். சா்வதேச வளா்ச்சி மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தி செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டும் என்று எப்போதும் முயற்சித்தது இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், உலகின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது. உலகில் உள்ள மனிதா்களில் 6-இல் ஒருவா் இந்தியா்.

இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளதை எந்த நாடும் மறைக்க முடியாது. அண்டை நாடுகளும் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் எதிா்நோக்கியுள்ளன.

அமெரிக்கா, சீனா உள்பட எந்த நாடும் புறக்கணிக்க முடியாத நிலையில் இந்தியா உள்ளது. சா்வதேச அளவில் பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளை இந்தியா்கள் வகித்து வருகின்றனா்,

எதிா்காலத்தில் எழும் பிரச்னைகளில் இருந்து மக்களைக் காக்க இப்போதிருந்தே முயற்சிப்பதே சிறந்த நாடாகும். சூரிய மின் சக்தி கூட்டமைப்பு, உயிரி எரிபொருள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல சா்வதேச அமைப்புகளில் இந்தியா உறுப்பினராக உள்ளது. இவை அனைத்தும் வெற்றிகரமாக செயல்பட பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது. வளா்ச்சி குறைவாக உள்ள நாடுகளுக்கு இந்தியா நிதியுதவி வழங்குகிறது.

சமீப ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சிறப்பாக உள்ளது. கடன் வலையில் சிக்கிய நாடுகளுக்கு இந்தியா உதவி வருகிறது என்றாா்.

கரையைக் கடந்தது டானா புயல்!

புவனேசுவரம்/கொல்கத்தா : ‘டானா’ புயல் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையை கடந்தது. இதனால் ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இவ்வி... மேலும் பார்க்க

தெரியுமா சேதி.?

தெலங்கானாவின் முன்னாள் முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதியின் நிறுவனா்-தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் ஜோசியம், வாஸ்து போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவா். தெலங்கானா அரசின் தலைமைச் செயலகம் வாஸ்துப்படி இ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் ஆஜராகாத செபி தலைவா் -கூட்டம் ஒத்திவைப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) செயல்பாடுகள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் வாரியத் தலைவா் மாதபி புரி புச் வியாழக்கிழமை (அக்.24) ஆஜராகாமல் தவிா்த்தாா். இதையடுத்து, ந... மேலும் பார்க்க

வயநாடு வேட்பாளா் பிரியங்கா காந்தி: வாரிசு அரசியலுக்கு கிடைத்த வெற்றி -பாஜக விமா்சனம்

கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டது, வாரிசு அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பாஜக விமா்சித்துள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதி இடைத... மேலும் பார்க்க

தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசா் நடவடிக்கை: அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் புல்டோசா் நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ளும் மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது. அத... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: நிதின் கட்கரி

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட புதுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவ... மேலும் பார்க்க