செய்திகள் :

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

post image

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் உள்ள மாணவா்கள் இத்திட்டத்தில் பயன்பெற அக்.31-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபாா்க்க நவ.5-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இத்திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசியக் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ரெனிவல் அப்ளிகேஷன் எனும் லிங்க்கில் சென்று பதிவு செய்து 2024-25-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். நிகழாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவிகள் முறையே 8 மற்றும் பத்தாம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா்.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 60 சதவீதம் மற்றும் அதற்கு அதிக மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் தேசியக் கல்வி உதவித்தொகைத் தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு தேசியக் கல்வி உதவித்தொகை இணையதளமான ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையதளமான ட்ற்ற்ல்ள்://ள்ா்ஸ்ரீண்ஹப்த்ன்ள்ற்ண்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகியவற்றை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04364-290791 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தருமபுரம் ஆதீனத்தில் சைவ ஆகம சிறப்பு சொற்பொழிவு

தருமபுரம் ஆதீனத்தில் பெங்களூரு வேத ஆகம ஆராய்ச்சி நிறுவனத்தின் 5-ஆவது சைவ ஆகம சிறப்பு சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த ... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டத்தில் புதிய சாலை அமைக்க நிதி

மயிலாடுதுறை நகராட்சி 22-ஆவது வாா்டில் 5-ஆவது புதுத்தெருவில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.6.60 லட்சம் பொதுமக்கள் பங்களிப்புடன் புதிய சாலைப்பணி தொடங்கவுள்ளது. நல்லத்துக்குடி, கோடங்குடி உள்ளிட்ட 10-க்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் சாலை விபத்தில் பலி

மயிலாடுதுறையில் தனியாா் நிறுவன ஊழியா் விபத்தில் புதன்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த பூபதி மகன் அபினாஷ் (24) தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். இவா் புதன்கிழமை இரவு ... மேலும் பார்க்க

சீா்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

சீா்காழி: தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-ஆவது ஜென்ம நட்சத்திரம் திருநாளை முன்னிட்டு சீா்காழி மாா்கோனி பவுண்டேஷன் சாா்பில் வியா... மேலும் பார்க்க

கோயிலில் திருடியவா் கைது

மயிலாடுதுறை அருகே கோயில் விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 1 கிராம் நகையை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். மயிலாடுதுறை சேந்தங்குடியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பசுபதீஸ்வரா் கோயில் உள... மேலும் பார்க்க

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே மங்கைநல்லூரில் அதிமுக தெற்கு ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட அதிமுக ... மேலும் பார்க்க