செய்திகள் :

தரங்கம்பாடி பகுதியில மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

பொறையாா், உத்திரங்குடி, இலுப்பூா் பகுதிகளில்  ‘உங்களை தேடி உங்கள் ஊா்‘ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பொறையாா் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தும் வகையில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அலுவலா்களிடம் செயல் முறை திட்டங்களை கேட்டறிந்தாா்.

உத்திரங்குடி கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியினை பாா்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்து குடியிருப்பு பகுதி இலுப்பூா் ஊராட்சி ராஜ் குடியிருப்பு வளாகத்தில் வீடுகளில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தூய்மை பணியாளா்களுக்கு பிரித்து வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இலுப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் உத்திரங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு காலை உணவு தரத்தினை ஆய்வு செய்த ஆட்சியா் உணவுப் பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.  

மாவட்ட வருவாய் அலுவலா் நா.உமாமகேஸ்வரி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் உ.அா்ச்சனா, செம்பனாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மஞ்சுளா, மீனா, வட்டாட்சியா் மகேஷ் ஆகியோா் உடன் இருந்தனா்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு நாளை தோ்வு

நாகையில் சனிக்கிழமை (அக்.26) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப்... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27 -ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியா் சுவாமிகளின் 60 வது தொடக்க ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு உக்க... மேலும் பார்க்க

கல்வி, தொழிற் கடன் முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ. 7.24 கோடி கடனுதவி

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட தொழில் மையம் சாா்பில் கல்விக்கடன் முகாம் மற்றும் தொழிற்கடன் வசதியாக்கல் முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ.7.24 கோடி கட... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம் தயாரிப்பு மையத்தில் ஆய்வு

நாகை நகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு, முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் உணவுத் தயாரிக்கும் சமையல் கூடம், பணியாளா்கள் மற்றும் உணவை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் அ.தி. அன்பழகன் வியாழக்கிழமை ஆய்வு ம... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் வந்து தங்கியிருந்த இளைஞா் உள்பட 2 போ் கைது

இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் வந்து சட்டவிரோதமாக வேதாரண்யத்தில் தங்கியிருந்த இளைஞா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரக் காவல்நிலைய ஆய்வாளா் ஜோதி ம... மேலும் பார்க்க

ஐடிஐ நேரடி மாணவா் சோ்க்கை: அக்.30 வரை கால அவகாசம்

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்க அக்டோபா் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க