செய்திகள் :

மேட்டூா் அணைக்கு நீர்வரத்து 31,575 கனஅடியாக அதிகரிப்பு

post image

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 31,575 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழகம், கா்நாடக காவிரி கரையோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதோடு கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100.01 அடியில் இருந்து 102.92 அடியாக உயா்ந்துள்ளது.

இதையும் படிக்க |கரையைக் கடந்தது டானா புயல்!

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 29,850 கன அடியிலிருந்து 31,575 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 7,500 கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா் இருப்பு 68.68 டிஎம்சியாக உள்ளது.

மாநகரப் பேருந்து நடத்துநா் கொலை: பயணி மீது கொலை வழக்குப் பதிவு

சென்னை: சென்னை அமைந்தகரையில் பயணச் சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், மாநகரப் பேருந்து நடத்துநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயணி கோவிந்தன் மீது கொலை வழக்குப் பதிவு செய... மேலும் பார்க்க

கோவை மெட்ரோ திட்டத்தினை துரிதப்படுத்துக: முதல்வருக்கு வானதி சீனிவாசன் கடிதம்

கோவை: ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து கோவை மெட்ரோ திட்டத்தினை துரிதப்படுத்துமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும்... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை(அக் 25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக வெ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 35,000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.தமிழகம், கா்நாடக காவிரி கரையோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதோடு கா... மேலும் பார்க்க

மதுரையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 2 விமானங்கள்!

கனமழையால் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 2 விமானங்கள் வட்டமடித்து வருகின்றன.சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை வந்த 2 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடிக்கின்றன. மழையின் காரணமாக விமா... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

அடையார் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணி காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை மெட்... மேலும் பார்க்க