செய்திகள் :

அண்ணாமலையார் கோயிலுக்கு ரூ.2.71 கோடி பணம், 110 கிராம் தங்கம்... பக்தர்கள் செலுத்திய காணிக்கை!

post image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில்

நினைத்தாலே முக்தி தரக்கூடிய அருள்மிகு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் பௌர்மணி கிரிவலத்துக்குப் பிறகு எண்ணப்படுகின்றன .

அதன்படி, புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் கடந்த 16-ம் தேதி இரவு 8 மணிக்குத் தொடங்கி, 17-ம் தேதி மாலை 5.38 மணிக்கு முடிவுற்றது. கடைசியாக, கடந்த செப்டம்பர் 26-ம் தேதி உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. அந்த மாத காணிக்கை தொகை 3,05,96,085 ரூபாய் ஆகும். இந்த நிலையில், செப்டம்பர் 26-ம் தேதிக்குப் பிறகான உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி திருஅண்ணாமலையார் கோயிலின் 3-வது பிரகாரத்திலுள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கின.

திருஅண்ணாமலையார் திருக்கோயில்

பக்தர்கள் காணிக்கை

கோயில் இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் இணைந்து காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கைகளை எண்ணி முடிக்க இரவு 8.30 மணி ஆனது. கோயில் உண்டியலில் மொத்தமாக 2,71,28,086 ரூபாய் காணிக்கைப் பணம் இருந்தன. மேலும் 110 கிராம் தங்கம் மற்றும் 1,150 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். இதைத்தொடர்ந்து, காணிக்கைத் தொகை, கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டன.

தேய்பிறை அஷ்டமி: ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை! | சிறப்பு ஆல்பம்

தேய்பிறை அஷ்டமி பைரவர் சிறப்பு பூஜைதேய்பிறை அஷ்டமி பைரவர் சிறப்பு பூஜைதேய்பிறை அஷ்டமி பைரவர் சிறப்பு பூஜைதேய்பிறை அஷ்டமி பைரவர் சிறப்பு பூஜைதேய்பிறை அஷ்டமி பைரவர் சிறப்பு பூஜைதேய்பிறை அஷ்டமி பைரவர் சி... மேலும் பார்க்க

கரைகண்டபுரம் ஈசனை நாளை வணங்கினால் கரைந்துபோகும் கர்மவினைகள்; என்ன விசேஷம்?

வழியிடையில் காவிரி நதியில் வெள்ளம் கரைபுரண்டோடியது. செய்வதறியாது தான் நின்ற தென் கரையிலேயே அம்பிகை சிவபூஜை செய்திட்டாள். அன்னையவள் நின்று ஆவடுதுறையின் கரையைக் கண்ட இடமே தற்போது 'கரைகண்டம்' என்ற‌ பெயரி... மேலும் பார்க்க

சுவாமிமலை: பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றிய விவகாரம்: இருவர் பணியிட மாற்றம்; அமைச்சர் சொன்னது பொய்யா?

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் 4ம் படை வீடாகும். இக்கோயிலில், மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று வெளி மாநில, மாவட்டங்களைச் ... மேலும் பார்க்க

``எல்லாம் ஐயப்பன் அருள்... பல ஆண்டு ஆசை நிறைவேறி உள்ளது'' சபரிமலை புதிய மேல்சாந்தி நெகிழ்ச்சி!

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் 21-ம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோ... மேலும் பார்க்க