செய்திகள் :

மாநகரப் பேருந்து நடத்துநா் கொலை: பயணி மீது கொலை வழக்குப் பதிவு

post image

சென்னை: சென்னை அமைந்தகரையில் பயணச் சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், மாநகரப் பேருந்து நடத்துநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயணி கோவிந்தன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை சின்னமலை வாத்தியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜா.ஜெகன்குமாா் (52). இவா், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். எம்.கே.பி. நகரில் இருந்து கோயம்பேடு செல்லும் மாநகரப் பேருந்து 46ஜி-இல்

ஜெகன்குமாா் வியாழக்கிழமை பணியில் இருந்தாா். அந்தப் பேருந்து அமைந்தகரை அண்ணா வளைவு அருகே சென்றபோது, பேருந்தில் இருந்த பயணி வேலூா் மாவட்டம், மாதனூா் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெ.கோவிந்தன் (53) என்பவரிடம் பயணச்சீட்டு எடுக்குமாறு நடத்துநா் ஜெகன்குமாா் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா். கோவிந்தன் தாக்கியதில் ஜெகன்குமாா் பலத்த காயமடைந்தாா். இதைப் பாா்த்த ஓட்டுநா், பேருந்தை நிறுத்தினாா். இதையடுத்து பயணிகளும் பொதுமக்களும் பலத்த காயமடைந்த ஜெகன்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஜெகன்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையும் படிக்க |2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம்: தவெக தலைவர் விஜய்!

தகவல் அறிந்து ஒட்டுமொத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் பாதி வழியிலேயே பேருந்தை நிறுத்தியதால் போக்குவத்து நெரிசல் காணப்பட்டது.

அதேவேளையில் காயமடைந்த கோவிந்தனும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழந்த விவகாரத்தில் கைதான பயணி கோவிந்தன் மீது அமைந்தகரை போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நடத்துநர் ஜெகன்குமாருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இனியாவது மதுக்கடைகளை மூடுமா திமுக அரசு?: ராமதாஸ் கேள்வி

மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாகவும், இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இனியாவது மதுக்கடைகளை மூடுமா திமுக அரசு? என பாமக நிறுவ... மேலும் பார்க்க

நத்தம் அருகே புளிய மரத்தில் அரசுப் பேருந்து மோதி விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே புளிய மரத்தில் அரசுப் பேருந்து மோதி விபத்துத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டப்பட்டியில் இருந்து 40-க்கு... மேலும் பார்க்க

கோவையில் இருந்து கள ஆய்வை தொடங்குகிறேன்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: நமது அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் நிலை குறித்த மாவட்ட வாரியான கள ஆய்வை வரும் நவம்பர் 5,6 ஆம் தேதிகளில் கோவையில் இருந்து தொடங்குகிறேன் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்ட... மேலும் பார்க்க

கோவை மெட்ரோ திட்டத்தினை துரிதப்படுத்துக: முதல்வருக்கு வானதி சீனிவாசன் கடிதம்

கோவை: ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து கோவை மெட்ரோ திட்டத்தினை துரிதப்படுத்துமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும்... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை(அக் 25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக வெ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 35,000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.தமிழகம், கா்நாடக காவிரி கரையோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதோடு கா... மேலும் பார்க்க