அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!
kanguva: கொண்டாடிய தெலுங்கு ரசிகர்கள்; `கண்கள் கலங்கி நிற்கிறேன்..' - சூர்யா நெகிழ்ச்சி
சூர்யா நடிப்பில் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் நவம்பர் 14ம் தேதி வெளியாகவிருக்கிறது 'கங்குவா' திரைப்படம்.
அதிரடி வராலாற்று காலத்து கதையில் கட்டுக்கடங்காத சூர்யா, இந்த காலத்திற்கேற்ப துறுதுறு காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் மற்றொரு சூர்யா என நீண்ட நாள் சூர்யா படத்திற்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா வாக வந்திருக்கிறது 'கங்குவா'. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, இதற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாகியுள்ளனர். அவ்வகையில் நேற்று (அக்டோபர் 24) ஹைதராபாத்தின் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதில் சூர்யா, இயக்குநர் 'சிறுத்தை சிவா' உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
சூர்யா, கார்த்தி இருவருக்குமே தெலுங்கு ரசிகர்கள் அங்கு அதிகம். கார்த்தியின் 'ஆயிரத்தில் ஒருவன்', சூர்யாவின் 'சூர்யா s/o கிருஷ்ணன் (வாரணம் ஆயிரம்)' திரைப்படம் தெலுங்கு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள். அதனால், சூர்யா, கார்த்தி தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு எப்போதும் இருக்கும். அந்த வகையில் நேற்றும் கங்குவா செய்தியாளர் சந்திப்பில் ஏராளமான ரசிகர்கள் சூர்யாவைக் காண நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். சூர்யாவின் வசனங்கள், பாடல்களைப் பாடி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
தெலுங்கு ரசிகர்களின் இந்த வரவேற்பையும், அன்பையும் கண்டு கண்கலங்கி நெகிழ்ச்சியுடன், 'நா இரத்தமும் மி இரத்தமும் வேறுவேறா (என் இரத்தமும் உங்கள் இரத்தமும் வெவ்வேறா' என 'கங்குவா' வசனத்தை ரசிகர்களுக்கு சமர்பித்து பேச ஆரம்பித்த சூர்யா, "எனக்கான நீங்கள் எப்போதும் பெரும் அன்பை அள்ளிக் கொடுக்கிறீர்கள். அதற்கெல்லாம் என் மிகப்பெரிய நன்றிகள். என் படத்தைப் பற்றி நீங்கள் கொண்டாடி பேசியது, வசனம், பாடல்களைப் பாடியதை நான் கேட்டு மனம் நெகிழ்ந்துபோனேன்.
எனக்குத் தெலுங்கில் கொஞ்ச நாள்களாகப் பெரிதாக எந்தப் படமும் வரதாத போதும் 'சூர்யா s/o கிருஷ்ணன் (வாரணம் ஆயிரம்)' படத்தைக் கொண்டாடினீர்கள். உங்களின் இந்த அன்பு என்னை திக்குமுக்காடச் செய்கிறது. உண்மையில் இப்போது மிகவும் உணர்ச்சி வசத்துடன் பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களின் அன்பால் என் கண்களில் கண்ணீர் துளி நிறைந்து கண்கள் கலங்கி நிற்கிறேன். நமக்கிடையே நிச்சயம் ஏதோவொரு இரத்தம் சொந்தம் இருப்பதாகவே உணர்கிறேன்.
'கங்குவா' திரைப்படம் திரையில் வரவிருக்கிறது. இரண்டரை ஆண்டுகால உழைப்பு இது. இதுவரை நீங்கள் பார்த்திடாத ஒரு திரை அனுபவத்தை இப்படம் உங்களுக்குக் கொடுக்கும். இது ஒரு இந்தியத் திரைப்படம். ஒரு போர்வீரனின் கதை இது. மக்களுக்காக, குடும்பத்திற்காக நிற்கும் ஒவ்வொருவரும் ஒரு போர் வீரர் தான். நீங்கள் அனைவரும் போர் வீரர்கள்தான்." என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...