அதிமுக ஆலோசனைக் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே மங்கைநல்லூரில் அதிமுக தெற்கு ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு பேசினாா். சட்டபேரவை முன்னாள் உறுப்பினா் ஏ. நடராஜன், ஒன்றிய எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் அமராவதி ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் ரேணுகா சுரேஷ், ராஜாராமன், அருணாசலம், பொருளாளா் அடைக்கலம்,
உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.