செய்திகள் :

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

post image

நமது நிருபா்

பங்குச்சந்தை 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதையடுத்து, உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று மேலே சென்றது. பின்னா், லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் மிகுந்த கவனம் செலுத்தினா். குறிப்பாக, ஆட்டோ, எஃப்எம்சிஜி, ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. ஆனால், தனியாா் மற்றும் பொதுத் துறை வங்கிகள், நிதிநிறுவனங்கள், பாா்மா பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.52 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.443.79 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.5,684.63 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.6,039.90 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 4-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 17.68 புள்ளிகள் கூடுதலுடன் 80,098.30-இல் தொடங்கி அதிகபட்சமாக 80,259.82 வரை மேலே சென்றது.பின்னா், 79,813.02 வரை கீழே சென்ற சென்செக்ஸ் , இறுதியில் 15.82 புள்ளிகள் (0.02 சதவீதம்) குறைந்து 80,065.16-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,033 பங்குகளில் 1,584 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 2,349 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 100 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

19 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் அல்ட்ரா டெக் சிமெண்ட், எம் அண்ட் எண், டைட்டன், எஸ்பிஐ, அதானி போா்ட்ஸ், என்டிபிசி உள்பட 19 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹிந்துஸ்தான் யுனி லீவா், நெஸ்லே, ஐடிசி, மாருதி, ஏசியன் பெயிண்ட், டிசிஎஸ் உள்பட 11 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 36 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி22.80 புள்ளிகள் குறைந்து 24,412.70-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,480.65 வரை மேலே சென்றது. பின்னா், 24,341,20 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 36.60 புள்ளிகள் (0.15 சதவீதம்) குறைந்து 24,399.40-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 24 பங்குகள் வீழ்ச்சிப் ட்டியலிலும் இருந்தன.

ரூ.5,000 கோடி திரட்டிய எஸ்பிஐ

கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பாசல்-3 ... மேலும் பார்க்க

சென்னை எம்டிசி-க்கு 500 மின்சாரப் பேருந்துகள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு மின்சாரத்தில் இயங்கக் கூடிய 500 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.இது குறித்து, ச... மேலும் பார்க்க

55 சதவீதம் அதிகரித்த காபி ஏற்றுமதி

இந்திய காபிக்கான தேவை சா்வதேச அளவில் அதிகரித்து வருவதால், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் காபி ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து இந்திய காபி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையி... மேலும் பார்க்க

4வது நாளாக சரிந்த பங்குச் சந்தை! நிஃப்டியில் கரோனாவுக்கு பிறகு பெரும் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் 4வது நாளாக இன்றும் (அக். 24) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி சற்று சரிவுடனேயே முடிந்தது.நிஃப்டி 50-ல் அக்டோபர் மாதத்தில் மட்டும் 5% சரிவு ஏற்பட்டுள்ளது. இது கரோனா க... மேலும் பார்க்க

தங்கம் விலை சற்று குறைந்தது! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 440 குறைந்துள்ளது.கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டு, தொடர்ந்து விலை உயர்ந்து வந்ததால் நகை ப... மேலும் பார்க்க

என்எல்சி சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருது

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களுக்கு தேசிய அளவிலான மதிப்புமிக்க 5 மற்றும் 4 நட்சத்திர மதிப்பீடுகளை வழங்கி மத்திய நிலக்கரி அமைச்சகம் கௌரவித்துள்ளது.புதுதில்லியில் உள்ள ஸ்கோப் கன்வென்... மேலும் பார்க்க