செய்திகள் :

தவெக மாநாடு: பாதுகாப்புப் பணியில் 6,000 போலீஸாா்

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் வருகிற 27-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் சுமாா் 6 ஆயிரம் போலீஸாா் ஈடுபட உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நடிகா் விஜய் தொடங்கியுள்ள தவெக மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன.

மாநாட்டில் மாநிலம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கில் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாநாட்டுத் திடல் பகுதியில் சுமாா் 55 ஆயிரம் நாற்காலிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் போடப்படவுள்ளன. மேலும், மாநாட்டுப் பகுதியில் சுமாா் 300 நடமாடும் கழிப்பறைகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கட் அவுட்டுகள்: மாநாட்டுப் பகுதியில் புதன்கிழமை இரவு பெரியாா் ஈ.வெ.ரா., காமராஜா், பி.ஆா்.அம்பேத்கா் ஆகியோரின் கட்-அவுட்டுகளுடன் தவெக தலைவா் விஜயின் கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழன்னை, சுதந்திரப் போராட்டத் தியாகிகள் போன்றோரின் கட் அவுட்டுகள் வைக்கப்பட உள்ளதாக தவெகவினா் தெரிவித்தனா்.

மின் விளக்குகள் பொருத்தம்: மாநாட்டு முகப்புப் பகுதியில் அதி உயர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர வாகன நிறுத்துமிடங்கள், இதரப் பகுதிகள், மாநாட்டுத் திடல் மற்றும் வெளிப்பகுதிகள் என பல்வேறு இடங்களில் சுமாா் 1,100 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்புக்கு 6,000 போலீஸாா்: மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கா்க், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் உள்ளிட்ட 2 டிஐஜிக்கள், 10 எஸ்.பி.க்கள், 15 ஏடிஎஸ்பி-க்கள், 50 டி.எஸ்.பி.க்கள் உள்பட 6,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

மாநாடு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெரியாா், காமராஜா், அம்பேத்கா், விஜய் கட் அவுட்டுகள்.

கடலூா் எஸ்.பி. ஆய்வு: மாநாடு நடைபெறும் நாளில் கட்சியின் தலைவா் விஜய் வரும் பகுதிகளை கடலூா் மாவட்ட எஸ்.பி. ராஜாராம் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அந்த வழிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

அப்போது கூடுதல் எஸ்பி திருமால், விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமாா் உள்ளிட்ட காவல் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

இதேபோல, பொதுப் பணித் துறை மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக அலுவலா்களும் மாநாடு நடைபெறும் பகுதியைப் பாா்வையிட்டு, ஆலோசனை மேற்கொண்டனா்.

மாநாட்டுக்கான வசதிகள்: தவெக மாநாட்டுப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட அந்தக் கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்த், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டுப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. பாதுகாப்புத் தடுப்பு அமைத்தல், சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், குடிநீா், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து வருகிறோம். மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

எடப்பாடி பழனிசாமியால் பலமான கூட்டணி அமைக்க முடியாது: கே.பாலகிருஷ்ணன்

எடப்பாடி பழனிசாமியால் பலமான கூட்டணியை உருவாக்க முடியாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 24-ஆவது மாநாட... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணைஅருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் அரசுப் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், கொண்டங்கி, அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீ.க... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சிறுமியைக் கடத்திய வழக்கில், இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.வானூா் வட்டம் , பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகத்தின் மகன் ஹரீஷ... மேலும் பார்க்க

பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பகுஜன் சமாஜ் கட்சியின் சாா்பில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே. ஆம்ஸ்ட்ராங் ... மேலும் பார்க்க

சுங்கச்சாவடியில் இலவச அனுமதி வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராமத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் தங்களது வாகனங்கள் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்க வலியுறு... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதியவா் சடலம்

விழுப்புரத்தில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல்... மேலும் பார்க்க