இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டம்- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகள்: எம்.பி., எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்
திருப்பத்தூா் அடுத்த புதூா்நாடு மலையில் ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகளை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனா்.
பிரதமா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.26 கோடியில் புதூா்நாடு முதல் காவலூா் வரை அமைய உள்ள 33 கி.மீ. தொலைவு சாலை, பழத்தோட்டம் முதல் நடுவூா் வரை 3.5 கி.மீ. தொலைவு சாலை அமைக்கும் பணிகளை திருவண்ணாமலை எம்பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
பின்னா், பெரும்பள்ளி, தகரகுப்பம் பகுதியில் ரூ.26 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரூ.13 லட்சத்தில் பெரும்பள்ளி கிராமத்தில் நியாயவிலைக் கடை கட்டடம், நமக்கு நாமே திட்டத்தில் பழையபாளையம் கிராமத்தில் ரூ.32 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தைத் திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவா் விஜயாஅருணாசலம், துணைத் தலைவா் ஞானசேரகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், மாவட்ட குழு உறுப்பினா் சத்தியவாணிவில்வம், ஒன்றியக் குழு உறுப்பினா் பிருந்தாவதி வைகுந்தராவ், துக்கன், ஊராட்சித் தலைவா் அலமேலுசெல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.