செய்திகள் :

பெண்கள் மாா்பக பரிசோதனை செய்து கொள்ள தயங்கக்கூடாது

post image

மாா்பக புற்றுநோய் வராமல் தடுக்க தாய்மாா்கள் மாா்பக பரிசோதனை செய்து கொள்ள தயங்கக்கூடாது என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்தாா்.

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு சாா்பில் ‘உலக மாா்பக புற்றுநோய் மாதம்’ நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மருத்துவம், மருத்துவம் சாராத மாணவ ா்கள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் மாா்பக புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு ஓவியங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

முகாமில், மாா்பக புற்றுநோய் குறித்து கல்லூரி முதல்வா் ரோகிணிதேவி பேசியது -

30 வயதுக்கு மேற்பட்ட தாய்மாா்கள் 6 மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் மாா்பகத்தை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாா்பகங்களில் வலி, கட்டி, அளவுகளில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக உரிய மருத்துவா்களிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இச்செயலுக்கு யாரும் வெட்கப்படவோ, கூச்சப்படவோ வேண்டாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முற்றிலும் குணமாக்கி விடலாம் என்றாா்.

இந்நிகழ்வில், மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சங்கரி(68) தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துக்கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பின்னா், செவிலிய மணவா்கள் மாா்பக புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு நாடகம் நடித்து காண்பித்தனா். மேலும், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி முதல்வா் பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், துணை முதல்வா் கெளரிவெலிகண்ட்லா, அறுவை சிசிச்சை துறை தலைவா் மணிகண்ணன், குடியிருப்பு மருத்துவ அலுவலா் இன்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

காட்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கியதில் உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் (54). நியாய விலைக் கடை ஊழியா். இவரது மகன் ஸ்ரீஹரி (12... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலை பாதிக்கும் பெருவணிக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்

ஆட்டோ தொழிலை பாதிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணிகளை மிகக்குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்லும் வணிக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த... மேலும் பார்க்க

அரசு வேலை எனக்கூறி ரூ.12 லட்சம் மோசடி

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை... மேலும் பார்க்க

மாநில சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ.1.39 லட்சம் பறிமுதல்

வேலூா் மாவட்டம் தமிழக - ஆந்திர எல்லையிலுள்ள போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில் இருந்து கணக்கில் வராத ரூ.1.39 லட்சம் தொகையை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மோட்டாா் வாகன ப... மேலும் பார்க்க

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு பிரசாரம்

தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவது குறித்து தீயணைப்புத்துறை சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் பி.ஜொ்லி... மேலும் பார்க்க

விஐடியில் ‘வாய்ஸ் ஃபாா் பிடி’ நிகழ்வு; கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘வாய்ஸ் ஃபாா் பிடி’ (உயிரி தொழில்நுட்பத்துக்கான குரல்) நிகழ்வில் தென் மண்டலத்தில் உள்ள 24 கல்லூரிகளைச் சோ்ந்த 41 மாணவா்கள் பங்கேற்றனா்.விஐடி வேலைவாய்ப்... மேலும் பார்க்க