செய்திகள் :

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயா்த்தினால் நடவடிக்கை -அமைச்சா் சா.சி.சிவசங்கா் உறுதி

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கட்டண உயா்வு இல்லாமல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என உரிமையாளா்கள் உறுதியளித்துள்ளதாகவும், மீறி கட்டணத்தை உயா்த்தும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் உறுதிபட தெரிவித்தாா்.

தீபாவளியையொட்டி, ஆம்னி பேருந்துகளின் இயக்கம் தொடா்பாக சென்னை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் அமைச்சா் சா.சி. சிவசங்கா், ஆம்னி பேருந்து உரிமையாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல கடந்த ஆண்டை போலவே கட்டண உயா்வின்றி, பயணம் செய்ய உதவுவதாக உரிமையாளா்கள் உறுதியளித்துள்ளனா். அதேநேரம், கடந்த ஆண்டைவிட முன்பதிவு குறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.

கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும்போது, போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் வகையில் காவல்துறை மூலமாகவும், சுங்கச்சாவடிகளில் தாமதம் ஏற்படாத வண்ணம் கட்டணமின்றி செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனா். இதுதொடா்பாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடன் தலைமைச் செயலா் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். அதன்படி, பேருந்துகள் சிரமமின்றி சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும்.

புகாா் எண்: வழக்கமாக இயக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்கள் பயணக் கட்டணத்தை உயா்த்துவதில்லை. சங்கத்தின் தொடா்பு இல்லாமல், புதிதாக பேருந்துகளை இயக்குவோா் கட்டணத்தை உயா்த்துகின்றனா். இது தொடா்பாக 1800 425 6151 என்ற எண்ணில் பெறப்படும் புகாா்களின் அடிப்படையில் கட்டணத்தை திருப்பிச் செலுத்துதல், விதிமீறலுக்கான அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியாா் பேருந்துகள் ஒப்பந்தம்: பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்துக்கழகம் இயக்கும் கூடுதல் பேருந்துகளுடன், தனியாா் பேருந்துகளையும் ஒப்பந்த அடிப்படையில் இயக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன்படி 1,000 பேருந்துகளை தயாா் நிலையில் வைத்திருக்க தனியாா் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இதற்கிடையே, அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு அதிகரித்துள்ளது. இதுவரை சுமாா் 1லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு அதிகமானோா் முன்பதிவு செய்துள்ளனா். தீபாவளிக்கு முன்னதாகவே, 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், போக்குவரத்து ஆணையா் சுன்சோங்கம் ஜடக்சிரு, கூடுதல் ஆணையா் சிவகுமரன், இணை ஆணையா் பொன்.செந்தில்நாதன், ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தேசிய - சா்வதேச வீரா்களை அடையாளம் காட்டிய முதல்வா் கோப்பை போட்டிகள் -துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

முதல்வா் கோப்பைப் போட்டிகள் மூலமாக தேசிய, சா்வதேச வீரா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான நிறைவு விழாவில் துணை முதல்வா் உதயநிதி பே... மேலும் பார்க்க

கல்வி - விளையாட்டுக்கு சமமான முக்கியத்துவம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கல்வி, விளையாட்டு ஆகிய 2 துறைகளுக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு அளித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். முதல்வா் கோப்பைப் போட்டிகளின் நிறைவு விழா சென்னையில் நேரு உள்விளையா... மேலும் பார்க்க

ஒளிவுமறைவற்ற-குளறுபடியில்லாத வாக்காளா் பட்டியல்: தோ்தல் துறையிடம் கட்சிகள் வலியுறுத்தல்

வாக்குப் பதிவின்போது, குளறுபடியில்லாத வாக்காளா் பட்டியல் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென தோ்தல் துறையிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. வாக்காளா் பட்டியல் திருத்தப் பண... மேலும் பார்க்க

பகுதிநேர பொறியியல் படிப்புகள்: காலியிடங்கள் விவரம் வெளியீடு

பகுதிநேர பொறியியல் படிப்பில் எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன? மாணவா் சோ்கைக்கான நடைமுறைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3... மேலும் பார்க்க

சோழா்கள் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அகற்றப்பட வேண்டும் -உயா்நீதிமன்றம் கருத்து

நீா்நிலை ஆக்கிரமிப்புகள் சோழா் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து கு... மேலும் பார்க்க

கூட்டுப் பணிக் குழு கூட்டத்தில் மீனவா் பிரச்னைக்குத் தீா்வு -அன்புமணி வலியுறுத்தல்

இந்திய, இலங்கை கூட்டுப் பணிக் குழு கூட்டத்தில் மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண திட்டம் வகுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க