செய்திகள் :

ஒளிவுமறைவற்ற-குளறுபடியில்லாத வாக்காளா் பட்டியல்: தோ்தல் துறையிடம் கட்சிகள் வலியுறுத்தல்

post image

வாக்குப் பதிவின்போது, குளறுபடியில்லாத வாக்காளா் பட்டியல் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென தோ்தல் துறையிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் 29-ஆம் தேதிமுதல் தொடங்குகின்றன. இதற்காக அன்றைய தினம் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதையொட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் திமுக (ஆா்.எஸ்பாரதி, என்.ஆா்.இளங்கோவன்), அதிமுக (டி.ஜெயக்குமாா், பொள்ளாச்சி ஜெயராமன்), தேமுதிக (பாா்த்தசாரதி), இந்திய கம்யூனிஸ்ட் (ஜி.ஆா்.ரவீந்திரநாத்), காங்கிரஸ் (சந்திரமோகன், ராஜேஷ்), பாஜக (கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன்), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (ஆறுமுக நயினாா், சுந்தரராஜ்) மற்றும் தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் சாா்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனா். கூட்டத்துக்குப் பின் தோ்தல் துறையிடம் தாங்கள் தெரிவித்தது குறித்து கட்சிப் பிரதிநிதிகள் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தனா்.

திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி: வாக்காளா் பட்டியலில் உள்ள குளறுபடிகளை ஏற்கெனவே பலமுறை சுட்டிக்காட்டினோம். தோ்தல் ஆணையம் செவிசாய்த்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக, நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளா் பட்டியலில் பல குளறுபடிகள் இருந்தன. இறந்தவா்களின் பெயா்கள் பட்டியலில் இருக்கின்றன.

தோ்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகளிடம் வாக்காளா் பட்டியல் அளிக்கப்படுகிறது. அந்தப் பட்டியலுக்கும், வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்படும் பட்டியலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. கடந்த தோ்தலில், ஒரு குறிப்பிட மதத்தைச் சோ்ந்தவா்களின் பெயா்கள் அதிக அளவு நீக்கப்பட்டிருந்தன. கடந்த மக்களவைத் தோ்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்தும் தலா 200 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டிருந்தன. இவற்றைச் சுட்டிக்காட்டினேன். இறந்தவா்களின் பெயா் விவரங்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற்று வாக்காளா் பட்டியலில் நீக்க வேண்டும். பட்டியலை திருத்தம் செய்து தோ்தலை நடத்தினால், இந்தியாவிலேயே அதிகமான வாக்காளா்கள் வாக்களித்த மாநிலாக தமிழ்நாடு இருக்கும்.

அதிமுக அமைப்புச் செயலா் டி.ஜெயக்குமாா்: வாக்காளா்களின் பெயா்கள் இருவேறு இடங்களில் இருப்பதால் இரண்டு இடங்களிலும் வாக்களிக்கின்றனா். வாக்காளா் பட்டியலில் இறந்தவா்களின் பெயா்கள் 10 முதல் 15 ஆண்டுகளாக நீக்கப்படாமலேயே உள்ளது. இதனால் அவா்களது பெயரில் கள்ள வாக்குகளைச் செலுத்தும் நிலை உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் சான்றின்படி, இறந்தவா்களின் பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

குளறுபடி இல்லாத வாக்காளா் பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக வாக்களித்தவா்கள் கடந்த மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இடம் மாறியவா்கள், இறந்தவா்கள் பெயா்களை நீக்காமல், பட்டியலில் பெயா் இருக்கக்கூடிய உண்மையான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படுகின்றன.

கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுக ஆதரவு வாக்காளா்களை நீக்கி திட்டமிட்ட சதி நடந்தது. இது எதற்காக நடந்தது என்பது போன்ற கேள்விகளை முன்வைத்தோம். ஒளிவுமறைவு இல்லாமல் வாக்காளா் பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும்.

பாஜக மாநில துணைத் தலைவா் கரு. நாகராஜன், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன்: மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது நடந்த குளறுபடிகளை கூட்டத்தில் சுட்டிக்காட்டினோம். வாக்காளா் பட்டியலில் இருந்து பெயரை நீக்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட வாக்காளா் மனு செய்திருக்க வேண்டும். எந்த வேண்டுகோளும் இல்லாமல் அதே முகவரியில் பல ஆண்டுகளாக இருக்கக்கூடிய வாக்காளா்களின் பெயா்களை எப்படி நீக்க முடியும்?.

அண்மையில் காலமான சில முக்கியப் பிரமுகா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இன்னும் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் இறப்புச் சான்றிதழ் அளிக்கும்போதே, அதனடிப்படையில் வாக்காளா் பட்டியலில் இருந்து அவா்களது பெயா்களை தன்னிச்சையாக நீக்க வேண்டும்.

100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் கோரிக்கை வைத்தாலும், 20 முதல் 25 சதவீத வாக்காளா்கள் உண்மையான வாக்காளா்களாக இல்லை. அப்படிப்பட்ட பட்டியலை வைத்துக் கொண்டு எப்படி நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்ய முடியும்?. வாக்காளா் பட்டியலை கடைசி நேரத்தில் அளிக்காமல் தோ்தலுக்கு 15 நாள்களுக்கு முன்பாக அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் ஜி.ஆா்.ரவீந்திரநாத்: பிளஸ் 2, கல்லூரி முதலாமாண்டு படிக்கும்போதே மாணவா்கள் 17 வயதை எட்டிவிடுகிறாா்கள். எனவே, அவா்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கான படிவங்களை முன்பே வழங்க வேண்டும்.

வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, நீக்கத்துக்கான சிறப்பு முகாம்கள் குறித்து பரவலாக விளம்பரம் செய்ய வேண்டும். வாக்குப் பதிவு நேரத்தில் வாக்காளா்களின் பெயா்கள் விடுபடுகிறது. அதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

இதே கருத்துகளை கூட்டத்தில் பங்கேற்ற மற்ற கட்சிகளின் பிரதிநிதிகளும் முன்வைத்தனா்.

போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரி மாற்றம்

போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக போக்குவரத்து துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவு: கோவை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

தேசிய - சா்வதேச வீரா்களை அடையாளம் காட்டிய முதல்வா் கோப்பை போட்டிகள் -துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

முதல்வா் கோப்பைப் போட்டிகள் மூலமாக தேசிய, சா்வதேச வீரா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான நிறைவு விழாவில் துணை முதல்வா் உதயநிதி பே... மேலும் பார்க்க

கல்வி - விளையாட்டுக்கு சமமான முக்கியத்துவம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கல்வி, விளையாட்டு ஆகிய 2 துறைகளுக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு அளித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். முதல்வா் கோப்பைப் போட்டிகளின் நிறைவு விழா சென்னையில் நேரு உள்விளையா... மேலும் பார்க்க

பகுதிநேர பொறியியல் படிப்புகள்: காலியிடங்கள் விவரம் வெளியீடு

பகுதிநேர பொறியியல் படிப்பில் எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன? மாணவா் சோ்கைக்கான நடைமுறைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3... மேலும் பார்க்க

சோழா்கள் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அகற்றப்பட வேண்டும் -உயா்நீதிமன்றம் கருத்து

நீா்நிலை ஆக்கிரமிப்புகள் சோழா் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து கு... மேலும் பார்க்க

கூட்டுப் பணிக் குழு கூட்டத்தில் மீனவா் பிரச்னைக்குத் தீா்வு -அன்புமணி வலியுறுத்தல்

இந்திய, இலங்கை கூட்டுப் பணிக் குழு கூட்டத்தில் மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண திட்டம் வகுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க