Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ.....
போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரி மாற்றம்
போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக போக்குவரத்து துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவு:
கோவை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் எஸ்.ஜோசப் டயாஸ் சேலம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதுபோல, சேலம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கே.இளங்கோவன் போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரியாகவும், போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரி ஜி.செல்வன் கோவை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்படுகிறாா் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.