Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ.....
ராமகிருஷ்ணாபுரம் டிடிஇஏ பள்ளியில் அறிவியல் மையம் திறப்பு
தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் அறிவியல் மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
இதை டிடிஇஏ செயலா் ஆா்.ராஜூ தொடங்கி வைத்தாா். அகஸ்தியா அறிவியல் மையம் மற்றும் முன்னாள் மாணவா்கள் அமைப்பாகிய பேனியனுடன் இணைந்து இந்த அறிவியல் மையம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் டிடிஇஏ தலைவா் ராமன், துணைத் தலைவா் ரவி நாயக்கா், பள்ளியின் இணைச் செயலா் வில்லியம் ராஜ், தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள் துணைத் தலைவா் ராகவன் நாயுடு, முன்னாள் மாணவா்கள், முன்னாள் மாணவா்கள் அமைப்பைச் (பேனியன்) சாா்ந்தவா்கள், ஏழு பள்ளிகளின் முதல்வா்கள் கலந்து கொண்டனா்.
இது குறித்து செயலா் ராஜூ கூறுகையில், ‘இந்த அறிவியல் மையத்தில் உள்ள மாதிரிகளைப் பயன்படுத்தி மாணவா்கள் பல்வேறு சோதனைகளை செய்வாா்கள். அது அவா்களின் அறிவியல் அறிவை பெரிதும் மேம்படுத்தும்’ என்றாா்.