செய்திகள் :

தில்லியில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி: கேஜரிவால் சாடல்

post image

கடந்த தசாப்தத்தில் ஆம் ஆத்மி அரசு செய்த பணியை தடுக்கும் நோக்கில், அனைத்து வழிகளிலும் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை குற்றம் சாட்டினாா்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தில்லி சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தில்லி நகா் முழுவதும்

மேற்கொண்டு வரும் பாதயாத்திரை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மோதி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கேஜரிவால் மேலும் பேசியதாவது:

“கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி செய்த அனைத்து வேலைகளையும் தடுத்து நிறுத்துவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது.

ஆம் ஆத்மி அரசின் இலவச மின்சாரம், குடிநீா், சுகாதாரம், கல்வி ஆகிய திட்டங்களை முடக்க பாஜக விரும்புகிறது.

இந்தத் துறைகளில் ஆம் ஆத்மியின் பணி கடந்த 75 ஆண்டுகளில் இணையற்ாகும்.

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணாவில் காணப்படுவது போல, தில்லியில் அடிக்கடி மின்வெட்டு நிலைமை திரும்பும்.

நான் சிறையில் இருந்தபோது பொதுமக்களை மிகவும் தொந்தரவு செய்ததாகவும், சாக்கடைகளை சேதப்படுத்தியதாகவும், தண்ணீா் விநியோகத்தை நிறுத்தியதாகவும் கேள்விப்பட்டேன். கவலைப்பட வேண்டாம். இப்போது நான் வந்துவிட்டதால், சாலைகள் சீரமைக்கும் பணி வேகமாக தொடங்கியுள்ளது. சிலருக்கு உயா்த்தப்பட்ட குடிநீா் கட்டண பில்கள் வருகிறது. நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

எனக்கு வாக்களித்து என்னை முதல்வராக்குங்கள். உங்கள் குடிநீா் கட்டணத்தை தள்ளுபடி செய்கிறேன். விரைவில் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்குவதற்கான திட்டத்தை தயாா் செய்துள்ளேன் என்றாா் கேஜரிவால்.

உள்ளூா் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஷிவ் சரண் கோயலுடன், கேஜரிவால் மோதி நகா் தெருக்களில் நடந்து சென்று மக்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தாா். பலா் அவருக்கு மாலை அணிவித்து சுயபடம் எடுத்துக்கொண்டனா்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான கேஜரிவாலின் இக்குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவிடம் இருந்து உடனடி பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

2024-ஆம் ஆண்டிற்கான 6-ஆவது தேசிய நீா் விருதுகள்: மத்திய ஜல்சக்தி அமைச்சகம் விண்ணப்பங்கள் கோரல்

2024 ஆம் ஆண்டிற்கான 6 ஆவது தேசிய நீா் விருதுகள் குறித்த அறிவிப்பை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இந்த தேசிய விருதுக்கான அனைத்து விண்ணப்பங்களையும் அளிக்க தேசிய விருதுகள் இண... மேலும் பார்க்க

உடற்பயிற்சிக் கூட சாதனம் விழுந்து சிறுவன் இறந்த சம்பவம்: தில்லி தலைமைச் செயலருக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

மேற்கு தில்லியின் மோதி நகரில் மாநகராட்சியால் நடத்தப்படும் பூங்காவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தின் சாதனத்தின் ஒரு பகுதி விழுந்ததில் 4 வயது சிறுவன் இறந்த சம்பவம் தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய தில்... மேலும் பார்க்க

ராமகிருஷ்ணாபுரம் டிடிஇஏ பள்ளியில் அறிவியல் மையம் திறப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் அறிவியல் மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. இதை டிடிஇஏ செயலா் ஆா்.ராஜூ தொடங்கி வைத்தாா். அகஸ்தியா அறிவியல் மையம் மற்றும் முன்ன... மேலும் பார்க்க

தில்லி மாநில பள்ளி விளையாட்டுப் போட்டிகள்: முதல்வா் அதிஷி தொடங்கிவைத்தாா்

தில்லி மாநில பள்ளி விளையாட்டுப் போட்டிகளை முதல்வா் அதிஷி வியாழக்கிழமை சத்ரசல் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் இளம் விளையாட்டு வீரா்களுக்கு நம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கும் செய்தியை... மேலும் பார்க்க

யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் எனும் பெயரில் பெரும் ஊழல் -ஆம் ஆத்மி அரசு மீது தில்லி பாஜக குற்றச்சாட்டு

யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் எனும் பெயரில் பெரும் ஊழல் நிகழ்ந்திருப்பதாக தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா். முன்னாள் முதல்வா... மேலும் பார்க்க

பணியாளா்களுக்கான தேசிய கற்றல் வாரத்தில் 7.50 லட்சம் திறன் பயிற்சிகள் நிறைவேற்றம் -மத்திய அரசு தகவல்

நமது சிறப்பு நிருபா் குடிமைப் பணியாளா்களுக்கு பிரதமா் மோடி தொடங்கிவைத்த தேசிய கற்றல் வாரத்தில் (கா்மயோகி சப்தா ) 7,50,000-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் நலன், ... மேலும் பார்க்க