செய்திகள் :

Doctor Vikatan: டயட், உடற்பயிற்சிகளைத் தொடரும்போதும் திடீரென நின்றுபோன weightloss.. ஏன்?

post image

Doctor Vikatan: என் வயது 38. நான் உடல் எடையைக் குறைப்பதற்காக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஜிம்மில் சேர்ந்தேன். முதல் சில மாதங்களில் எடை குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அது அப்படியே நின்றுவிட்டது. எடை அதிகரிக்கவும் இல்லை, குறையவும் இல்லை. அதே உடற்பயிற்சிகளையும் உணவுப்பழக்கத்தையும்தான் பின்பற்றி வருகிறேன்.  ஆனாலும், திடீரென எடைக்குறைப்பு  நின்று போனது ஏன்... மீண்டும் எடை குறையச் செய்ய என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். 

ஷைனி சுரேந்திரன்

எடைக்குறைப்பு முயற்சியில் இறங்கியவர்களுக்கு முதல் சில மாதங்களில் உடல் எடை நன்கு குறையும். திடீரென ஒரு கட்டத்தில் அது கூடவோ, குறையவோ செய்யாமல் அப்படியே நின்றுவிடும். 'அதே வொர்க் அவுட்டையும் டயட்டையும் ஃபாலோ பண்றேன்... ஆனாலும், வெயிட் குறையாம அப்படியே நிக்குதே...' என்று புலம்புவார்கள். இதை 'வெயிட்லாஸ் ப்ளாட்டோ' ( Weight loss plateau ) என்று சொல்கிறோம்.

வெயிட்லாஸ்  ப்ளாட்டோ நிலையை எப்படித் தகர்ப்பது என்பது வெயிட்லாஸ் முயற்சியில் உள்ள பலரின் கவலையாகவும் சவாலாகவும் இருக்கும். முதல் வேலையாக, ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டை சேர்த்துக்கொள்ளுங்கள். வேகவைத்த கார்ன், வேகவைத்த உருளைக்கிழங்கு, வேக வைத்த சன்னா அல்லது ராஜ்மா, ஒரு கப்  வேகவைத்த கேரட் அல்லது பீட்ரூட் அல்லது பட்டாணி, வீட்டிலேயே தயாரித்த பிரியாணி  போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை முதல் 3-4 நாள்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். 

நின்றுபோன weightloss

கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளையும் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடும்போது உங்கள் உடல் எடையில் மாற்றத்தைப் பார்ப்பீர்கள். 3 - 4 நாள்களுக்கு  எண்ணெயே  இல்லாத  உணவுகளைச் சாப்பிடலாம். ஆவியில் வேகவைத்த காய்கறிகள், ஃப்ரெஷ் பழங்கள், மோர், இளநீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது எண்ணெய், உப்பு, மசாலா என எல்லாமே தவிர்க்கப்படும். அதன் விளைவாக உங்கள் வெயிட்லாஸ் பிளாட்டோ நிலை தகரும்.

காலை, மதியம் மற்றும் இரவு உணவுக்கு நிறைய பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். இடைப்பட்ட நேரத்தில் பசியெடுக்கும்போது மோர் குடிக்கலாம். தயிரில் புதினா- கொத்தமல்லி சட்னி கலந்து சாப்பிடலாம். தயிர் பச்சடி சாப்பிடலாம்.  இவற்றையெல்லாம் பின்பற்றிப் பாருங்கள். குறையாமல் அப்படியே இருந்த உடல் எடை, நிச்சயம் குறையத் தொடங்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

நின்ற இதயம், 120 நிமிடங்கள் கழித்து துடித்தது... ஒடிசாவில் நடந்த மெடிக்கல் மிராக்கிள்!

eCPR சிகிச்சை மூலம் இதயத்துடிப்பு நின்ற 120 நிமிடங்களுக்குப் பிறகு, நோயாளி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒடிசாவில் நாயகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் இதயத்துடிப்பு கிட்டத்தட்ட 90... மேலும் பார்க்க

Health: பச்சையா, வறுத்ததா, வேக வைத்ததா... வேர்க்கடலையில் எது நல்லது?

எல்லாருக்கும் பிடிச்ச ஒரு தின்பண்டம் வேர்க்கடலை. சிலருக்கு பச்சையா சாப்பிட பிடிக்கும். சிலருக்கு ரோட்டோரங்கள்ல உப்புத்தண்ணி தெளிச்சு வறுத்து தர்ற வேர்க்கடலை பிடிக்கும். இன்னும் சிலருக்கு வேக வெச்ச வே... மேலும் பார்க்க

வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..?

எல்லோருமே ஜிம்முக்கு சென்று மாங்கு மாங்கென்று உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம்.ஆனால், அனைவருக்கும் இது சாத்தியம் இல்லை. அதனாலேயே கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களை 'ஆஹோ ஓ... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் தோல் குழந்தைகள்: காரணம் என்ன? தீர்வு இருக்கிறதா? - நிபுணர் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்னாள், ராஜஸ்தானின் பிகானரிலுள்ள மருத்துவமனையில் பிளாஸ்டிக் போன்ற கடினமான தோலுடன் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை அனைவரும் அறிவோம். ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் (Harlequin-type i... மேலும் பார்க்க

MIOT: அறுவை சிகிச்சை மீதான அச்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி; ரோபோடிக் அறுவை சிகிச்சை

மியாட் மருத்துவமனை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்குவதற்கும், அவர்களது விளைவுகளை மேம்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.இன்றைய உலகில் அதிந... மேலும் பார்க்க

Doctor Vikatan: 'பிக் பாஸ்' போட்டியாளர் சௌந்தர்யாவின் குரல் பிரச்னை... தீர்வு உண்டா?

Doctor Vikatan:விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சௌந்தர்யா என்பவருக்கு குரல் தொடர்பான பிரச்னை இருக்கிறது. அவர் இருவிதமான குரல்களில் பேசுகிறார். சிறுவயதில் தன் குரலை வைத... மேலும் பார்க்க