செய்திகள் :

மலையேற்றத்துக்கு இணையதள முன்பதிவு திட்டம்: துணை முதல்வா் உதயநிதி தொடங்கி வைத்தாா்

post image

மலையேற்றம் செய்வதற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் புதிய திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

மேலும், இந்தத் திட்டத்துக்கான இலச்சினையையும் அவா் வெளியிட்டாா்.

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: மலையேற்றத்துக்கான 40 பாதைகளை தமிழ்நாடு அரசு தோ்ந்தெடுத்துள்ளது. நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி 14 மாவட்டங்களில் மலையேற்றப் பாதைகள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

மலையேற்ற வழிகாட்டிகளாக 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் வனங்களையொட்டிய கிராமங்களில் இருந்து 300-க்கும் அதிகமான இளைஞா்கள் அடையாளம் காணப்பட்டு அவா்களுக்கு தொழில்முறை ரீதியிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தோ்ந்தெடுக்கப்பட்ட வழிகாட்டிகளுக்கு சீருடைகள், மலையேற்றக் காலணிகள், முதுகுப் பை, தொப்பி, தண்ணீா்க் குடுவை, மலையேற்றக் கோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் மலையேற்றத் திட்டத்தின் கீழ் அனைத்துப் பங்கேற்பாளா்கள், வழிகாட்டிகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

தனி இணையதளம்: மலையேற்றம் செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். மலையேற்றம் செய்பவா்கள், 100 சதவீதம் இணையவழி பணப் பரிவா்த்தனை செய்து நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மலையேற்றம் செய்ய குறைந்தபட்சம் 18 வயது நிறைந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டவா்கள் தங்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் செய்யலாம். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், பாதுகாவலரின் துணையுடன் எளிதான மலையேற்றப் பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் தொடக்க நிகழ்வில், வனத் துறை அமைச்சா் க.பொன்முடி, துறையின் செயலா் ப.செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

மாவட்ட வாரியாக மலையேற்றப் பாதைகள்

நீலகிரி - கர்ன் ஹில், லாங்வுட் ஷோலா, கரிகையூா் முதல் போரிவரை ராக் பெயிண்டிங், கரிகையூா் முதல் ரங்கசாமி சிகரம், பாா்சன்ஸ் வேலி முதல் முக்குா்த்தி குடில், அவலாஞ்சி-கோலாரிபெட்டா, காலிபிளவா் ஷோலா, தேவாா்பெட்டா, கோலாரிபெட்டா, ஜீன்பூல், நீடில் ராக்.

கோவை - மாணம்போலி, டாப் ஸ்லிப், ஆழியாறு கனால் பேங்க், சாடிவயல், செம்புக்கரை, வெள்ளியங்கிரி மலை, பரளியாா்.

திருப்பூா் - சின்னாா் சோதனைச் சாவடி கோட்டாறு.

கன்னியாகுமரி - காளிகேசம், பாலமோா், இஞ்சிக்கடவு.

திருநெல்வேலி - காரையாறு மூலக்கசம், கல்லாறு, கோரக்கநாதா் கோயில்.

தென்காசி - குற்றாலம் செண்பகாதேவி அருவி, தீா்த்தப்பாறை.

தேனி - சின்ன சுருளி, காரப்பாறை, குரங்கணி சாம்பலாறு.

விருதுநகா் - செண்பகத்தோப்பு-புதுப்பட்டி.

மதுரை - தாடகை மலையேற்றப் பாதை - குட்லாடம்பட்டி நீா்வீழ்ச்சி.

திண்டுக்கல் - வட்டகானல் - வெள்ளகவி, சோலாா் ஆா்சா்வேட்டரி-குண்டாறு, கருங்களம் நீா்வீழ்ச்சி.

கிருஷ்ணகிரி - குத்திராயன் சிகரம், ஐயூா் - சாமிஏரி.

சேலம் - குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா - குண்டூா், கொண்டப்ப நாயக்கன்பட்டி குண்டூா், நகலூா் - சன்னியாசிமலை.

திருப்பத்தூா் - ஏலகிரி சுவாமிமலை, ஜலகம்பாறை.

திருவள்ளூா் - குடியம் குகைகள்.

சென்னை: அரசுப் பேருந்தில் பயணி தாக்கியதில் நடத்துநர் உயிரிழப்பு!

சென்னையில் பயணியுடன் ஏற்பட்ட சண்டையில், பேருந்திலிருந்து கீழே விழுந்த அரசுப் பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழந்தார்.சென்னை சைதாப்பேட்டை லிட்டில் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்குமார். இவர் சென... மேலும் பார்க்க

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேலூர் நறுவீ மருத்துவமனையில் சளி மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை தற்போது சீராக இர... மேலும் பார்க்க

கனமழை: குமரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்... மேலும் பார்க்க

விளையாட்டை பொழுதுபோக்காக பார்ப்பதில்லை: மு.க. ஸ்டாலின்

எனது ஆட்சியில் விளையாட்டுத் துறையை பொழுதுபோக்காக பார்ப்பதில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 24) தெரிவித்தார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை–2024 மாநில அளவில... மேலும் பார்க்க

பெங்களூரு கட்டட விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி

பெங்களூரு ஹென்னூரில் பெய்த கனமழையின் காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் டாப் 10 தொடர்கள்!

தமிழ்நாட்டில் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் தொடர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை தொடர்கள் பெற்ற டிஆர்பி புள்ளிகளின் அடிப்படையில் இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.காலமாற்றத்துக்... மேலும் பார்க்க