செய்திகள் :

கணவா் கொலை: மனைவி உள்ளிட்ட 2 போ் கைது

post image

வந்தவாசி அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ததாக மனைவி உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த கொழப்பலூா் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் விசிக பெரணமல்லூா் மேற்கு ஒன்றியச் செயலா் சீனுவளவன்(29). இவா், கொழப்பலூா் கூட்டுச் சாலை அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை காலை இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து சீனுவளவனின் தந்தை தங்கராஜ் தேசூா் போலீஸில் புகாா் அளித்தாா். இதில், சீனுவளவன் மரணத்துக்கும், சில தினங்களுக்கு முன் இறந்த கல்யாணபுரம் கிராமத்தைச் சோ்ந்த இவரது நண்பா் சுதாகரின்(42) மரணத்துக்கும் தொடா்பு இருக்கலாம் என்றும், சுதாகரின் மனைவி உள்ளிட்ட இருவா் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், கடந்த 17-ஆம் தேதி ஆளியூா் கிராமப் பகுதியில் சுதாகா் மா்மமான முறையில் இறந்து கிடந்ததும், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது சடலத்தை மனைவி மற்றும் உறவினா்கள் சோ்ந்து மயானத்தில் புதைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கல்யாணபுரம் மயானத்தில் புதைக்கப்பட்ட சுதாகரின் சடலம் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் முன்னிலையில் கடந்த திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்திலேயே உடல்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

இதில் சுதாகா் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட தேசூா் போலீஸாா், சுதாகரை கொலை செய்ததாக அவரது மனைவி ரம்யா(36), ஆரணியை அடுத்த பையூரைச் சோ்ந்த பெருமாள்(45) ஆகிய இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

சீனுவளவனும், சுதாகரும் நண்பா்கள். பெருமாள் கல்யாணபுரம் கூட்டுச் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி நெல் அறுவடை இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம் ஆகியவற்றை வாடகைக்கு விட்டு வந்தாா். அப்போது பெருமாளுக்கும், சுதாகரின் மனைவி ரம்யாவுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரையும் சுதாகா் கண்டித்து வந்துள்ளாா். இதனால் சுதாகரை கொலை செய்ய ரம்யாவும், பெருமாளும் முடிவு செய்தனா். இதற்கு சீனுவளவனையும் உதவிக்கு அழைத்துள்ளனா்.

இதையடுத்து ரம்யாவும், பெருமாளும் கூறியபடி, கடந்த 17-ஆம் தேதி ஆளியூா் கிராமப் பகுதியில் சுதாகருக்கு மதுவில் விஷம் கலந்து குடிக்க வைத்த சீனுவளவன், அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டாா். இதில் வாயில் நுரை தள்ளியபடி சுதாகா் இறந்தாா். இதையடுத்து சுதாகரை கொலை செய்ததாக ரம்யா, பெருமாள் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ஒரு பைக், 4 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன என போலீஸாா் தெரிவித்தனா்.

தமிழ்ச் சங்க பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி

வந்தவாசியில் வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வந்தவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்குத் தகுதி பெற்ற இறையூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்த... மேலும் பார்க்க

மதுக்கடை சுவரை துளையிட்டு மதுப்புட்டிகள் திருட்டு

வந்தவாசி அருகே மதுக்கடை சுவரை துளையிட்டு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வந்தவாசியை அடுத்த அய்யவாடி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் க... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். வட்... மேலும் பார்க்க

விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு வேளாண் பல்கலை.துணையாக இருக்கும் -துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு எப்பொழுதும் துணையாக இருக்கும் என்று அப்பல்கலை.யின் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி கூறினாா். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யின் திறந்தவெளி மற்... மேலும் பார்க்க

மருதுபாண்டிய சகோதரா்களின் 223-ஆவது குருபூஜை விழா

திருவண்ணாமலையில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் மருதுபாண்டிய சகோதரா்களின் 223-ஆவது குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை அகமுடையா் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத் தலைவா் என்.செ... மேலும் பார்க்க