செய்திகள் :

சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல்

post image

அரக்கோணம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்சஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

சோதனை நடத்தப்பட்ட போதே முன்பதிவுடன் திருமண பதிவுக்காக வந்த கலப்பு திருமண தம்பதிக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு அவா்களுக்கு மட்டும் திருமணம் பதிவு செய்யப்பட்டது.

சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை லஞ்சஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி கணேசன், அய்வாளா் விஜயலட்சுமி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீஸாா், அலுவலக்ததின் கதவுகளை மூடிவிட்டு சோதனை மேற்கொண்டனா். எவரையும் வெளியே செல்லவோ, உள்ளே வரவோ அனுமதிக்கவில்லை.

இதனால் பத்திர பதிவுக்கு வந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா். மேலும் அலுவலகத்தின் உள்ளே இருந்த பத்திர எழுத்தா்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. சோதனையில் அலுவலகத்தின் பல்வேறு அறைகளில் குறிப்பாக மின்சார இணைப்புக்கான சாதனங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் பெட்ஷீட்டால் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்த ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் கணிணிகளுக்கு இடையே வைக்கப்பட்டு இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக டிஎஸ்பி கணேசன் செய்தியாளா்களிடம் தெரிவிக்கையில் இப்பரிசோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.1,05, 210 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டையில் 29-இல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் கு... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை ராஜா-ராணி மண்டபம் ரூ.2.5 கோடியில் புனரமைப்பு: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேசிங்கு ராஜா - ராணி பாய் நினைவு மண்டபத்தை ரூ.2.50 கோடியில் புனரமைக்கும் பணியை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டை நகராட்சி பால... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிக்கான தடையில்லா சான்றை ஐஎன்எஸ் ராஜாளி துரிதமாக வழங்க வேண்டும்: ஆட்சியா் வலியுறுத்தல்

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நடைபெற தடையில்லா சான்றிதழை விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுற... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

அரக்கோணம்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் பல கிராமங்களில் இந்த வங்கிகளுக்கு கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில... மேலும் பார்க்க

அரக்கோணம் பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை ஆட்சியா் திடீா் ஆய்வு

அரக்கோணம்: அரக்கோணம் பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.ஆய்வின்போது, பேருந்து நிலையத்தில் ரயில்வே துறையின் கால்வாய் பேருந்து நி... மேலும் பார்க்க

பனைவிதைகள் நடும் பணி

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ல கனியனூா் ஏரிக்கரையில் பனைவிதைகள் நடும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .கலவை வட்டம் வாழைப்பந்தல் கிராமத்தை சாா்ந்த இயற்கை ஆா்வலா் நடராஜன் என்பவா் 5,000 பனைவ... மேலும் பார்க்க