செய்திகள் :

நியூஸி.யை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி!

post image

முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்

அதன்படி விளையாடிய இந்திய அணியில் அதிகபட்சமாக தேஜல் 42 ரன்களும், தீப்தி 41 ரன்களும், யாஸ்டிகா 37 ரன்களும், ஜேமிமா 35 ரன்களும், ஷபாலி 33 ரன்களும் எடுத்தனர், மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இந்திய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 44.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து தரப்பில் அமேலியா கெர் 4 விக்கெட்டுகளும், அவரது சகோதரியான ஜெஸ் கெர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஜேமி ஸ்மித் அதிரடியால் மீண்ட இங்கிலாந்து; பாக். நிதான ஆட்டம்!

அதன்பின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 40.4 ஓவர்களில் 168 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணியில் புரூக் 39 ரன்களும், மேடி கிரீன் 31 ரன்களும் எடுத்தனர். இந்திய அணித் தரப்பில் ராதா யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 41 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்திய தீப்தி சர்மா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கிறது.

நியூசி.க்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரகசியம் பகிர்ந்த வாஷிங்டன் சுந்தர்!

பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்

வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும் என மெஹிதி ஹாசன் மிராஸ் தெரிவித்துள்ளார். வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) ந... மேலும் பார்க்க

ஜேமி ஸ்மித் அதிரடியால் மீண்ட இங்கிலாந்து; பாக். நிதான ஆட்டம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ந... மேலும் பார்க்க

நியூசி.க்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரகசியம் பகிர்ந்த வாஷிங்டன் சுந்தர்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிகரமாக செயல்பட்டதற்கான ரகசியத்தை வாஷிங்டன் சுந்தர் பகிர்ந்துள்ளார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புண... மேலும் பார்க்க

259 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து; ஏமாற்றமளித்த ரோஹித் சர்மா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட... மேலும் பார்க்க

டக் அவுட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சினின் மோசமான சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நடந்து வருகிறது. இந்தப் போட... மேலும் பார்க்க

பாட் கம்மின்ஸ் பகிர்ந்த மறக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம்!

மறக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் சிறந்த ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பகிர்ந்துள்ளார்.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கானத் தொடர் வருகிற நவம்பர் ம... மேலும் பார்க்க