செய்திகள் :

Samsung: 'கலவரம் பண்றோம்னு சொல்லி சஸ்பெண்ட் பண்றாங்க!'- உள்ளிருப்பு போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள்!

post image
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த முறை உள்ளிருப்புப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். சங்கம் அமைக்க போராடியவர்களை குறிவைத்து 'கலவரம் செய்றோம்னு சொல்லி சஸ்பெண்ட் பண்றாங்க!' என சாம்சங் நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர்.
சாம்சங்

சாம்சங் தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்கிறார்கள். இந்த ஊழியர்களெல்லாம் இணைந்து சங்கம் அமைக்கும் முயற்சியில் இறங்கினர். அதற்கு சாம்சங் நிர்வாகம் முட்டுக்கட்டை போட்டது. தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையும் தொழிலாளர்களின் சங்கத்தை பதிவு செய்வதில் கால தாமதப்படுத்தியது. இதனால் சிஐடியூ போராட்டத்தை முன்னெடுக்க ஊழியர்கள் தொழிற்சாலைக்கு அருகேயே ஒரு மைதானத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏறக்குறைய 25 நாட்களுக்கு மேல் இந்தப் போராட்டம் நீடித்தது. அதன்பிறகு அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடுகள் எட்டப்பட்டு போராட்டத்தை முடித்து வைத்தனர்.

சாம்சங் ஊழியர்கள்

ஆனாலும் தொழிலாளர் நலத்துறை சங்கத்தை பதிவு செய்யாமல் இருந்தது. சிஐடியூ தரப்பில் நீதிமன்றத்துக்கு சென்றார்கள். பலகட்ட போராட்டத்துக்கு பிறகு ஒருவழியாக சில வாரங்களுக்கு முன்பு தொழிலாளர் நலத்துறை சார்பில் 'சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம்' என்ற சங்கத்தை பதிவு செய்தனர். ஊழியர்களும் சுமுகமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில்தான், ஊழியர்கள் திடீரென மீண்டும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். என்ன நடந்ததென விரிவாக விசாரித்தோம்.

'சங்கம் ஆரம்பிக்க வேண்டி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கிய சமயத்தில் அதை மழுங்கடிக்கும் சார்பில் நிறுவனத்துக்குள்ளேயே ஒரு சங்கம் ஆரம்பிக்கிறோம் என ஊழியர்களுக்காக ஒரு கமிட்டியை அமைத்தார்கள். அதில் நிறுவன ஆதரவு மனநிலை கொண்ட 150 ஊழியர்கள் மட்டுமே உறுப்பினராக இருந்தார்கள். நாங்கள் களத்தில் இறங்கி போராடிய பிறகு 'சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம்' பதிவு செய்யப்பட்டது. ஆனால், இப்போதும் நிறுவனத்துக்குள்ளேயே அமைக்கப்பட்ட அந்த கமிட்டிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

போராடும் ஊழியர்கள்

நாளைக்கு கூட அந்த கமிட்டியின் சார்பில் இராணிப்பேட்டையில் ஒரு கூட்டம் நடக்கிறது. அதற்கு நிறுவனம் சார்பிலேயே பேருந்துகள் ஏற்பாடு செய்து கொடுத்து ஆட்களை அனுப்பி வைக்கிறார்கள். இதுசம்பந்தமாகவெல்லாம் பேசுவதற்காக ஊழியர்கள் ஒன்றாக இணைந்து எம்.டியை சந்திக்க சென்றிருக்கின்றனர். எம்.டியை சந்திக்கவே விடாமல் காத்திருக்க வைத்து அனுப்பிவிட்டார்கள். அத்தோடு நிற்காமல் உங்களின் ப்ரேக் டைமையும் தாண்டி வேலை செய்யாமல் நேரத்தை விரயம் செய்திருக்கிறீர்கள் எனக் கூறி மூன்று ஊழியர்களுக்கு 'Pending Suspension' கொடுத்திருக்கிறார்கள். இதன்மூலம் அவர்களை ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு கூட சஸ்பெண்ட்டில் வைத்திருக்க முடியும்.

இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என தெரிய வந்தபிறகுதான் ஊழியர்கள் தரப்பில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இன்று ஐந்தாவது நாளை எட்டிவிட்டோம். 1400 ஊழியர்கள் போராட்டம் செய்து வருகிறோம். நிறுவனத்துக்கு சாதகமாக உள்ள சில ஊழியர்களையும் அனுபவமில்லாத தற்காலிக ஊழியர்களையும் மட்டும் பணியில் வைத்து உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் சில ஊழியர்கள் மெஷின்களை கையாள தெரியாமல் காயமடைந்தும் செல்கிறார்கள். சங்கம் வேண்டி போராடிய ஊழியர்கள் மீது விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் வகையில்தான் இப்படி நடந்து வருகிறார்கள். எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை கேட்கும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிடமாட்டோம்.' என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள்.

இதுதொடர்பாக, சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துக்குமாரிடமும் பேசினேன். 'நிறுவனத்துக்கு சாதகமாக சில ஊழியர்கள் இணைந்து ஒரு கமிட்டியை வைத்திருக்கிறார்கள். அது நிறுவனத்தில் தயவில் அவர்களின் விருப்பப்படி உருவான கமிட்டி. அதில் கூட எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அது ஊழியர்களின் விருப்பம். ஆனால், அந்த கமிட்டியை வைத்துக் கொண்டு சங்கத்துக்காக போராடிய ஊழியர்களுக்கு இடையூறு கொடுக்கிறார்கள். அந்த கமிட்டியை சேர்ந்த ஒரு 25 பேரை சங்கத்தை சேர்ந்த ஊழியர்களிடம் பேசி மனதை மாற்றுவதற்காக மட்டுமே வைத்திருக்கிறார்கள். சங்கத்துக்காக போராடிய ஊழியர்களை அவர்கள் பார்த்திடாத வேறு டிபார்ட்மெண்ட்களில் தூக்கி போட்டிருக்கிறார்கள்.

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்க தலைவர் முத்துக்குமார்

மீண்டும் பழைய இடத்துக்கே வர வேண்டுமெனில் நிறுவனத்தின் ஊழியர்கள் கமிட்டியில் இணைய சொல்கிறார்கள். அந்த கமிட்டியில் இணைந்தால் 3 லட்சம் வரைக்கும் வட்டியில்லா கடன் கொடுப்பதாக ஆசை வார்த்தைகளும் கூறுகிறார்கள். இப்படியெல்லாம் உளவியல் இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த சாம்சங் தொழிற்சாலையின் எம்.டியை சந்திக்க சென்றிருக்கிறார்கள். நானும் தொலைபேசியில் அவர்களுடன் தொடர்பில் இருந்தேன். நிறுவனத்தின் மனிதவளத்துறை சார்பில் 15 நாட்கள் கழித்து எம்.டியை சந்திக்க நேரம் வழங்குவதாக சொன்னார்கள். நாங்களும் அதை ஒப்புக்கொண்டு கலைந்துவிட்டோம். இது ஜனவரி 31 ஆம் தேதி நடந்த சம்பவம்.

போராடும் ஊழியர்கள்

பிப்ரவரி நான்காம் தேதியிலிருந்து ஊழியர்கள் வேலை நேரத்தில் ஒன்று கூடி கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 3 பேரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை தொடருமென தெரிந்த பிறகுதான் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட சஸ்பெண்ட்டை நீக்க வேண்டும். நிர்வாகம் வைத்திருக்கும் கமிட்டி நிறுவனத்துக்குள் அதன் குயுக்தியான வேலையை தொடரக் கூடாது. நிறுவனம் உழைக்கும் ஊழியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்டும். இதுதான் எங்களின் போராட்டத்துக்கான காரணம்.' என்றார் விரிவாக.

Delhi: `வெற்றி பெற்றால்தான் எதிர்காலம்' - கட்டளையிட்ட தலைமை... டெல்லி பாஜக செய்து முடித்தது எப்படி?

தணிந்த ஏக்கம்..!டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பாஜக-வின் 28 ஆண்டுக்கால காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மூன்றாவது முறையாகவும் நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்த... மேலும் பார்க்க

தேர்தலுக்கு தேர்தல் மாநிலம் மாறும் 39 Lakh Voters? | Delhi Erode Election Results | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* டெல்லி தேர்தல் முடிவுகள்! - Live Report From Delhi * அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்கத் துணைநிலை ஆளுநர் உத்தரவு ஏன்?* வெளியேறச் சொன்ன போலீஸ்.. கடுப்பாகிக் கொந்தளித்த சீதால... மேலும் பார்க்க

Delhi : 'மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்கு கொண்டு வருவோம்'- பர்வேஷ் வர்மா கூறியதென்ன?

புதுடெல்லி தொகுதியில் 3 முறை வென்ற முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை தோற்கடித்து புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றிருக்கிறார்... மேலும் பார்க்க

Delhi: 'டெல்லியின் வளர்ச்சிகளை பாஜக உறுதி செய்யும்.!' - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று ... மேலும் பார்க்க