செய்திகள் :

Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

post image

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. 

தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய டிரம்ப், “அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகள் (இந்தியா- பாகிஸ்தான்) தங்களுக்குள் தீவிரமாக மோதிக் கொண்டிருந்தன.

டிரம்ப்
டிரம்ப்

நான் மத்தியஸ்தம் செய்தபோது அவர்கள் இருவருமே நாங்கள் போரைத் தொடர்வோம் என்றனர். இருவருமே வலுவானவர்கள்.

பிரதமர் மோடி மிகவும் நல்லவர். ஆனால் அவர் ரொம்பக் கெடுபிடியானவரும்கூட. `போரை நாங்கள் தொடர்வோம்' என்றார்.

நான் மோடியிடம், `நீங்கள் போரைத் தொடர்ந்தால் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லை' என்றேன்.

பின்னர் பாகிஸ்தான் அரசிடமும் அதையே சொன்னேன். பின்னர் அவர்களே என்னை அழைத்து போரை நிறுத்துவதாகச் சொன்னார்கள்.

மோடி
மோடி

நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்து வருகிறேன். எனக்குப் பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் இருக்கிறது.

எங்களுக்குள் நல் உறவும் உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பிரதமரும் சிறந்த போராளி தான் ” என்று பேசியிருக்கிறார்.

``2026 - ல் பாஜக தமிழ்நாட்டில் காணாமல் போகும்; மீண்டும் திமுக 2.0 தொடரும்!'' - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் பூங்கா முன்பு அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவி குழுவினரால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியை தம... மேலும் பார்க்க

``2 நாள் உனக்கு டைம்; என்னுடைய வீரியத்தை பார்ப்பாய்'' - பெண் அதிகாரியை தரக்குறைவாக பேசிய விசிக மா.செ

கன்னியாகுமரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார் பாரதி. சமீபத்தில், நாகர்கோவில் அருகே உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து, அனுமதியின்றி இயங... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திருப்பூர் வந்த சி.பி.ராதாகிருஷ்ணன்; பிரமாண்ட வரவேற்பு |Photo Album

திருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூர் ... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? - TVK Arun Raj Interview

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க