`கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை தயங்குவது ஏன்?’ - உ...
குற்றாலம்: முதல்வரை சந்திக்க சுவர் ஏறி குதித்த திமுகவினர்; காவல்துறை திணறல்
பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொள்ள தென்காசிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்திருந்தார். இந்நிலையில், காலை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குற்றாலம் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தங்கினார்.
அவரை சந்திக்க மாலையில் நிர்வாகிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் விருந்தினர் மாளிகை முன்பு நுழைவு வாயிலில் அவர்களை தடுக்கப்புகளை வைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்.

இதனால் முக்கிய மாவட்ட நிர்வாகிகளை உள்ளே அனுமதிக்காமல் இருந்ததாக கூறி நிர்வாகிகள் காவல்துறையிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசு வாகனத்தை மறித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் விருந்தினர் மாளிகையின் மெயின் கேட் வரை நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதும் திமுக நிர்வாகிகள் மீண்டும் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கேட்டை தள்ளிக் கொண்டு முண்டியடித்தும், கோட்டை சுவரை ஏறிக்குதித்தும் சென்றனர்.
இதனால் அங்கிருந்த நிர்வாகிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து திமுகவினரை விருந்தினர் மாளிகையையில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

















