சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி எ...
What To Watch: இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படைப்புகள் என்னென்ன?
இந்த வாரம் தியேட்டர் மற்று ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் லிஸ்ட் இதோ!
ஆர்யன்:
விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன், மானஸா சௌத்ரி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ஆர்யன். இத்திரைப்படம் அக்டோபர் 31 திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆண் பாவம் பொல்லாதது:
நடிகர்கள் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஷீலா ராஜ்குமார், RJ விக்னேஷ் காந்த், ஜென்சன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் `ஆண் பாவம் பொல்லாதது'. இத்திரைப்படம் அக்டோபர் 31 திரையரங்குகளில் வெளியாகிறது.

தேசிய தலைவர்:
பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ராம் அப்துல்லா ஆண்டனி:
சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
பாகுபலி - தி எபிக்:
பெரும் வெற்றிப் பெற்று பேன் இந்தியா கலாச்சாரத்திற்கு விதையிட்ட `பாகுபலி' திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் இணைந்து ஒரே திரைப்படமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) திரையரங்குகளில் வெளியாகிறது.
DIES IRAE - மலையாளம்:
நடிகர் பிரணவ் மோகன்லால் நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான இது அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Mass Jathara -தெலுங்கு:
நடிகர்கள் ரவி தேஜா, ஸ்ரீலீலா நவீன் சந்திரா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் திரைப்படம். இது அக்டோபர் 31அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

The Taj Story- இந்தி:
தாஜ் மஹாலை பின்னணியாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் பரேஷ் ரவால் நடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
The Black Phone 2- ஆங்கிலம்:
2022-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிப் பெற்ற ப்ளாக் போன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ஹாரர் த்ரில்லர் திரைப்படமான இது அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
தியேட்டர் டு ஓடிடி:
இட்லி கடை - Netflix:
நடிகர் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
Lokah Chapter 1: Chandra - Jio Hotstar (மலையாளம்):
கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லீன் ஆகியோரது நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வெற்றியடைந்த திரைப்படம். இத்திரைப்படம் அக்டோபர் 31 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
Kantara: A Legend Chapter 1 - Prime Video (கன்னடம்):
ஏற்கனவே வெளிவந்து வெற்றிப்பெற்ற காந்தாரா திரைப்படத்தின் முன்கதையாக கடந்த அக்டோபர் 2-ம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற இத்திரைப்படம், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.
Baaghi 4 - Prime Video (இந்தி):
நடிகர் டைகர் ஷெராஃபின் ஆக்ஷன் அவதாரத்தில் வெளிவந்த பாகி திரைப்படத்தின் நான்காவது பாகமான இது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.

ஓடிடி தொடர்கள்:
Kalyanam Dum Dum Dum - Tentkotta - அக்டோபர் 31
Maarigallu (கன்னடம்) - Zee5 - அக்டோபர் 31
It: Welcome To Derry (ஆங்கிலம்) - ஜியோ ஹாட்ஸ்டார் - அக்டோபர் 27
Down Cemetery Road (ஆங்கிலம்) - Apple TV - அக்டோபர் 29
Mayor Of Kingstown Season 4 (ஆங்கிலம்) - Jio Hotstar - அக்டோபர் 26
Rulers Of Fortune Season 1 (போர்ச்சுகல்) - Netflix - அக்டோபர் 29
Physical Asia Season 1 (கொரியன்) - Netflix - அக்டோபர் 28The Witcher
Season 4 (ஆங்கிலம்) - Netflix - அக்டோபர் 30



















