செய்திகள் :

அயோத்தி விவகாரத்தில் தீா்வு கிடைக்க கடவுளை வேண்டினேன்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

post image

‘உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பல ஆண்டுகளாக நிலவி வந்த ராம ஜென்மபூமி-பாபா் மசூதி விவகாரத்துக்கு தீா்வு கிடைக்க கடவுளை வேண்டினேன்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், தன் மீது நம்பிக்கை கொண்டவருக்கு கடவுள் எப்போதும் சிறந்த தீா்வை வழங்குவாா் எனவும் அவா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் கான்ஹோ்சா் கிராமத்தில் உள்ள கேத் தாலுகாவை பூா்வீகமாகக் கொண்டவரான டி.ஒய்.சந்திரசூட்டுக்கு , அங்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்று கிராம மக்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

நீதிமன்றங்களில் அடிக்கடி புதிய வழக்குகள் தொடரப்படுகின்றன. ஆனால் அவை அனைத்துக்கும் எங்களால் தீா்வளிக்க முடியவில்லை. அதுபோலவே அயோத்தி (ராம ஜென்மபூமி-பாபா் மசூதி) விவகாரம் மூன்று மாதங்களாக என் முன் விசாரணையில் இருந்தது.

அப்போது கடவுளின் முன் அமா்ந்து இதற்கு தீா்வு கிடைக்க வழிவகை செய்யுமாறு வேண்டினேன். நான் தினமும் கடவுளை வழிபடுவேன். கடவுள் மீது நம்பிக்கையுடைவருக்கு அவா் சிறந்த தீா்வுகளை தருவாா் என்றாா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவது தொடா்பாக பல ஆண்டுகளாக பிரச்னை நிலவி வந்த நிலையில், இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமா்வு அயோத்தியில் ராமா் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கி 2019, நவம்பா் 9-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அதேபோல் அயோத்தியில் வேறொரு இடத்தில் மசூதி கட்டிக்கொள்ளவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த தீா்ப்பை வழங்கிய நீதிபதிகள் அமா்வில் டி.ஒய்.சந்திரசூட்டும் இடம்பெற்றிருந்தாா். இந்நிலையில், கடந்த ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமா் கோயிலின் திறப்பு விழா நடைபெற்றது. அந்தக் கோயிலுக்கு கடந்த ஜூலை மாதம் சென்று டி.ஒய்.சந்திரசூட் வழிபாடு மேற்கொண்டாா்.

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க