இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!
“அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை செயல்பாட்டுக்கு வரும்! ” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
“மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. இன்று பிற்பகலுக்குப் பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்ற மருத்துவர் பாலாஜி, தனியறைக்கு மாற்றப்பட இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும், அந்த தனியறையிலும் இருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்ற இளைஞரை, மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த காவலர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோர், ‘காவல் உதவி’ செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பொது மருத்துவப்பிரிவுக்கு வருவோருக்கு நீலநிற டேக் பொருத்தப்படும். நோயாளியுடன் வருவோருக்கு டேக் பயன்பாடு சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகள், உறவினர்களின் கையில் டேக் கட்டும் நடைமுறை உள்ளது. டேக் கட்டும் நடைமுறை, படிப்படியாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்பாட்டுக்கு வரும்.
மருத்துவமனைகளின் பாதுகாப்பு ஏற்பாடை உறுதி செய்ய தலைமை செயலாளர் தலைமையில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. சிசிவிடி கேமராக்கள் பொறுத்துவது, மின்விளக்குகளை உறுதி செய்வது, ஒப்பந்த பணியாளர்களின் வருகை பயோமெட்ரிக் பதிவு செய்வது போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்படும்" என்று மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY