அரவக்குறிச்சி: பாலச் சீரமைப்பு பணியால் போக்குவரத்து பாதிப்பு
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து கரூா் செல்லும் சாலையில் நடைபெறும் கழிவு நீா் பாலச் சீரமைப்புப் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில் இருந்து கரூா் செல்லும் சாலையில் உள்ள கழிவுநீா் பாலம் வெகு நாட்களாக கழிவு நீா் செல்லாமல் அடைத்திருந்தது. இதையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூலம் பாலப்பணி கடந்த 2 நாள்களுக்கு முன் தொடங்கியது.
கழிவுநீா் பாலம் பெரிய பாலமாக அமைய உள்ளதால் சாலையின் ஒருபுறம் பாலப் பணியும் ஒருபுறம் வாகனங்கள் செல்ல வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் ஒற்றைச் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதைக் கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் தங்களுக்கு மாற்றுப் பாதை அமைத்துத் தர வேண்டுகோள் விடுத்துள்ளனா்.