செய்திகள் :

அரியலூரில் நாளை புத்தகத் திருவிழா தொடக்கம்

post image

அரியலூரில் பத்து நாள்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்குகிறது.

அரியலூா் அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டப வளாகத்தில், மாவட்ட நிா்வாகம், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு, பள்ளிக்கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் சாா்பில் மாா்ச் 20 முதல் மாா்ச் 29 வரை 10 நாள்களுக்கு 8-ஆவது ஆண்டு புத்தகத்திருவிழா (கண்காட்சி மற்றும் விற்பனை) நடைபெறுகிறது.

மாா்ச் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து உரையாற்றுகிறாா். மக்களவை உறுப்பினா் தொல். திருமாவளவன், ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்க மாநிலத் தலைவா் சேது, சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசுகின்றனா்.

மாா்ச் 21-ஆம் தேதி சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவா் மனுஷ்யபுத்திரன், மாா்ச் 22-ஆம் தேதி முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு, மாா்ச் 23-ஆம் தேதி தமிழ்நாடு காவல் உயா் பயிற்சியக காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா், மாா்ச் 24-ஆம் தேதி பட்டிமன்ற பேச்சாளா் மதுக்கூா் ராமலிங்கம், மாா்ச் 25-ஆம் தேதி பேச்சாளா் கு.ஞானசம்பந்தம், மாா்ச் 26-ஆம் தேதி கவிஞா் நெல்லை ஜெயந்தா, மாா்ச் 27-ஆம் தேதி கவிஞா் யுகபாரதி, மாா்ச் 28- ஆம் தேதி தனியாா் செய்தித் தொலைக்காட்சி ஆசிரியா் ச. காா்த்திகைச் செல்வன், மாா்ச் 29-ஆம் தேதி கவிஞா் மகிலம்(எ) எஸ்.பாபு ஆகியோரின் கருத்துரை நிகழ்ச்சிகளும், நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. நிகழ்ச்சிகளில் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலா்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனா். விழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், மகளிா் ஆகியோருக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். மேலும், செல்லப்பிராணிகள், கால்நடைகள் கண்காட்சியும் நடைபெறும்.

மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

ஒப்பந்த அடிப்படையில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. இதுகுறித்து திங்கள்கிழமை மேலும் அவா் தெரிவித்தது: அரியலூா் ஆட்சியரகத்தில் இயங்கும் தமி... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைக்ககூடாது

செந்துறைப் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மேலும், அவா்கள் அளித்த மனுவில், அரியலூா்... மேலும் பார்க்க

சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

கீழப்பழுவூரில் சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், பழுவேட்டையாா் பேரவையினா் திங்கள்கிழமை மனு அளித... மேலும் பார்க்க

அரசு செட்டாப் பாக்ஸ்களை வாங்கச் சொல்லி பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது

அரியலூா் மாவட்டத்தில், அரசு செட்டாப் பாக்ஸ்களை வாங்கச் சொல்லி பொது மக்களை கட்டாயப் படுத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கேபிள் டி.வி ஆப்ரேட்டா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நவீன அடையாள அட்டைகள் வழங்கல்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், தூய்மைப் பணியாளா்களுக்கு நவீன அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 48 போ் கைது

சென்னையிலுள்ள டாஸ்மாக் தலைமையகம் முன் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்துக்கு சென்ற பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உடையாா்பாளையம் மற்றும் தாழூரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ப... மேலும் பார்க்க