Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
கீழப்பழுவூரில் சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், பழுவேட்டையாா் பேரவையினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த பேரவையின் தலைவா் கோ.இ. காா்த்திக் உள்ளிட்டோா் அளித்த மனுவில், கீழப்பழுவூா் அடுத்த கருப்பூா் சேனாபதி கிராமத்தில் சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கத்துக்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம், செட்டிநாடு சிமென்ட் ஆலை சாா்பில் மாா்ச் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இங்கு ஏற்கெனவே இயங்கி வரும் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
எனவே, உரிய வல்லுநா் குழு அமைத்து, சுரங்கம் உள்ள பகுதியை முழுமையாக களஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுவரை கருத்துக்கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கள ஆய்வு மேற்கொண்ட பிறகு பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு அனுமதிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.