தென் மாநிலங்களில் சமமான தொகுதி மறுவரையறை செயல்முறை அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்க...
அரசு செட்டாப் பாக்ஸ்களை வாங்கச் சொல்லி பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது
அரியலூா் மாவட்டத்தில், அரசு செட்டாப் பாக்ஸ்களை வாங்கச் சொல்லி பொது மக்களை கட்டாயப் படுத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கேபிள் டி.வி ஆப்ரேட்டா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அச்சங்கத்தின் சாா்பில் மாவட்டத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் அளித்த மனு: தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக புதிய செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்யாததால், கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் தனியாா் நிறுவனங்களிடம் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி, இணைப்பு வழங்கி தொழில் நடத்தி வந்தோம்.
தற்போது, அரசு 2 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்துள்ளது. இதனை கேபிள் டிவி அதிகாரிகள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய வற்புறுத்துகின்றனா்.
வாடிக்கையாளா்கள் அரசு செட்டாப் பாக்ஸை மாற்றிக்கொள்ள மறுக்கின்றனா். மேலும், பாக்ஸ் வாங்காத கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் மாற்றப்படுகின்றனா். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடா்பாக தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆப்ரேட்டா்களிடம் கையெழுத்து பெற்று முதல்வரிடம் மனு அளிக்க உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
