செய்திகள் :

அரியலூா் அருகே வீட்டின் பீரோவை உடைத்து ரூ.4 லட்சம் ரொக்கம் திருட்டு

post image

அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூரில் வீட்டின் அறையின் பீரோவில் இருந்த ரூ. 4 லட்சம் ரொக்கத்தை வெள்ளிக்கிழமை இரவு திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடிவருகின்றனா்.

பொய்யாதநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் கருப்பையா (26). இவா், வெள்ளிக்கிழமை இரவு ரூ. 4 லட்சத்தை தனது வீட்டின் அறையில் உள்ள பீரோவில் வைத்துவிட்டு தூங்கியுள்ளாா்.

பின்னா் சனிக்கிழமை காலை அவா் எழுந்துவந்து பாா்த்தபோது, அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

அறையின் உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.4 லட்சம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, கருப்பையா அளித்த புகாரின்பேரில், செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நூறு நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி மறியல்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிலுப்பனூா் கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டப் பணிகளை முறையாக வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.படவிளக்கம்: சிலுப்பனூரில் 100 நாள் வ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளில் நவ.23-இல் கிராமசபை கூட்டம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (நவ.23) கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: இந்தக் கிராமசப... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் முகாம்

அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் புகாா்களை கேட்டறிந்த அவா்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஆசிரியா் போக்சோவில் கைது

அரியலூா் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியா் ‘போக்சோ’ சட்டத்தில் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அரியலூா் திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மருதமுத்து மகன் ராஜீவ்காந்தி... மேலும் பார்க்க

2026 பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு வாழ்வா, சாவா போன்றது: கே.பி.முனுசாமி

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா போன்றது என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி. அரியலூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கள ஆய்வுக் கூ... மேலும் பார்க்க

தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் ஆட்சியரகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், நில ஒருங்கிணைப்புச் சட்டத்... மேலும் பார்க்க