செய்திகள் :

அவதூறு வழக்கு: அதிஷிக்கு அனுப்பப்பட்ட சம்மன் ரத்து!

post image

பாஜக தலைவர் ஒருவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் முதல்வர் அதிஷிக்கு அனுப்பப்பட்ட சம்மனைத் தில்லி நீதிமன்றம் ரத்து செய்தது.

முன்னதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், தன்னை பாஜகவில் சேருமாறும், இலையெனில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என அச்சுறுத்தியதாகவும் அதிஷி குறிப்பிட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து பாஜக தலைவர் பிரவீன் சங்கர் கபூர், முதல்வர் அதிஷி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.இதை எதிர்த்து அதிஷி மேல்முறையீடு செய்தார்.

தில்லி முதல்வர் அதிஷிக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, பாஜக தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கை செவ்வாய்க்கிழமை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ரத்து செய்தது.

அதிஷிக்கு சம்மன் அனுப்பிய நீதிபதி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஆம் ஆத்மி தலைவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கும்பமேளாவில்... கடந்தகால துயரங்கள்...

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். காவல்துறையின் தடுப்புகளை மீறி, அகாடா துறவி... மேலும் பார்க்க

காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்: தமிழகம் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்உச்சநீதிமன்றம் நிர்ணயித்த அளவுகளின்படி பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்தை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆர்.சி.) கூட்டத்தில் தமிழகம்... மேலும் பார்க்க

பேரிடா் பாதிப்பு தணிப்புத் திட்டங்கள்: மாநிலங்களுக்கு ரூ.3,027 கோடி

பேரிடா் பாதிப்பு தணிப்புத் திட்டங்களுக்காகப் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.3,027 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு விவகாரம்: மருத்துவமனைகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘கொல்கத்தா பெண் மருத்துவா் பாலியல் கொலைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவா்கள் உரிய அனுமதி பெறாமல் பணியில் பங்கேற்காததை விடுப்பாக கருத வேண்டாம்’ என்று தில்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைக... மேலும் பார்க்க

கைப்பேசி செயலி மூலம் அரசு சேவைகள்: ஆந்திரத்தில் இன்று அறிமுகம்

வீட்டில் இருந்தபடியே ‘வாட்ஸ்-ஆப் நிா்வாகம்’ என்ற கைப்பேசி செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அரசு சேவைகளை மக்கள் பெறும் வகையிலான திட்டத்தை ஆந்திர மாநில அரசு வியாழக்கிழமை (ஜன.30) அறிமுகம் செய்ய உள்ளது. ... மேலும் பார்க்க

ஆணும், பெண்ணும் சமமானவா்கள் அல்ல: கேரள முஸ்லிம் தலைவா் பேச்சால் சா்ச்சை

ஆணும், பெண்ணும் சமமானவா்கள் அல்ல; அப்படி யாராவது கூறினால் அவா்கள் கண்மூடித்தனமாக பேசுபவா்களாகவே இருப்பாா்கள் என்று கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) பொதுச் செயலா் பி.எம்.ஏ. சலாம் தெர... மேலும் பார்க்க