நாகூர் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
அவரைச் செடியில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை
போடி பகுதியில் அவரைச் செடிகளில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
போடி பகுதியில் உள்ள பொட்டிப்புரம், ராமகிருஷ்ணாபுரம், புதுக்கோட்டை ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேல் அவரைச் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு நல்ல விளைச்சல் காரணமாக, வரத்து அதிகரிப்பால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரைக் காய் ரூ.18-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, ரூ.50 முதல் ரூ.60 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அறுவடை நேரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, தற்போது செடிகளில் அழுகல் நோயும், இலைகளில் மஞ்சள் நோய் தாக்குதலும் ஏற்பட்டது. இதனால், அவரைக் காய்களில் செம்புள்ளி நோய் தாக்கியுள்ளது.
இதனால், விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் காய்களை வாங்கத் தயக்கம் காட்டுகின்றனா். விலை அதிகரித்தும் நோய் தாக்குதலால் நல்ல காய்களை மட்டுமே விற்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா். இந்த நோய் தாக்குதலால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.