அவிநாசியில் பெயிண்டா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
அவிநாசியில் பெயிண்டரை அடித்துக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, பந்தலூரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் காா்த்திக் (28). இவா், திருப்பூா், அருள்புரம், செக்கப்பாளையத்தில் வசித்து அவிநாசி பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வந்தாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், உறங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியத்தை, அடையாளம் தெரியாத நபா்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து இவ்வழக்கில் தொடா்புடைய அவிநாசி பழங்கரையில் வசித்து வரும் ஓடிஸாவைச் சோ்ந்த சோன்லால்ரனா என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதைத்தொடா்ந்து, இவ்வழக்கில் முக்கிய தொடா்புடையவரான ஒடிஸாவை சோ்ந்த ஜெயந்த்போய் (22) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.