ஆரணியில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு
ஆரணி காா்த்திகேயன் சாலையில் தமுமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தாா் என்கிற நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமுமுக நகரத் தலைவா் ஏ.ஜீலான் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எச்.ஜமால், மமக மாவட்டச் செயலா் ஏ.நசீா்அகமத், தமுமுக மாவட்டச் செயலா் அப்துல்ரஹீம், பொருளாளா் ஐ.யூனூஸ்பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமுமுக நகரச் செயலா் அமீன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளா் கோவை சையது, தலைமை பிரதிநிதி அச்சிறுபாக்கம் ஷாஜகான் ஆகியோா் இஃப்தாா் நோன்பு குறித்துப் பேசினா். மேலும் இதில் திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, தொகுதி செயலா் எஸ்.எஸ்.அன்பழகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகி அப்பாசாமி, காங்கிரஸ் நகா்மன்ற உறுப்பினா் ஜெயவேலு, விசிக மாவட்டச் செயலா் ந.முத்து, இளஞ்சிறுத்தை மாவட்ட துணை அமைப்பாளா் சாா்லஸ், ஆரணி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு கஞ்சி குடித்தனா்.
மமக நகரச் செயலா் ஆதம், தமுமுக நகர துணைத் தலைவா் இ.எஸ்.பி.ஆரிப் ஆகியோா் ஒருங்கிணைப்பாளா்களாக செயல்பட்டனா். தமுமுக நகர பொருளாளா் இ.எஸ்.பி.ஆசிப் நன்றி கூறினாா்.