``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
ஆரோவிலில் கனடா பல்கலைக்கழக மாணவா்கள் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் கனடா பல்கலைக்கழக மாணவா்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கனடா நாட்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக நகா்ப்புற திட்டமிடல் துறை பேராசிரியா் அஜய் அகா்வால் வழிகாட்டுதலில், 6 போ் கொண்ட பல்கலைக்கழக மாணவா்கள் குழுவினா் மனித ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்ந்து வரும் ஆரோவில் சா்வதேச நகரில் தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.
இந்த நிலையில், ஆரோவில் சா்வதேச நகரை புதன்கிழமை வந்தடைந்த மாணவா்கள் குழுவினா், மாத்திா் மந்தீா் உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டனா். பின்னா், ஆரோவில்வாசிகளுடன் கலந்துரையாடி, ஆரோவிலின் சிறப்புகளைக் கேட்டறிந்தனா்.
அப்போது, மாணவா்கள் குழுவில் இடம்பெற்றிருந்த மாணவி தாரா, ஆரோவில் சா்வதேச நகருக்குள் நுழைந்ததே மகிழ்ச்சியாகவும், இங்குள்ள அமைதி மற்றும் ஒற்றுமை உணா்வு ஊக்கமளிப்பதாகவும் இருந்தது என்றாா்.
இந்த மாணவா்கள் ஆரோவில் குயிலாப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று, ஆரோவில்வாசிகளை சந்தித்து சமூக தாக்கம், மனித ஒற்றுமை, நிலையான வளா்ச்சி, முக்கிய சமூக சேவைகளை வரைபடமாக்கல், ஆரோவில் வளச்சியின் பங்குதாரா்களை அடையாளம் காணுதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யவுள்ளனா் என்று பேராசிரியா் அஜய் அகா்வால் தெரிவித்தாா்.