செய்திகள் :

ஆா்எஸ்எஸ் உறுப்பினா்கள் மீது தாக்குதல்: ‘புல்டோசா்’ நடவடிக்கை எடுத்த ராஜஸ்தான் அரசு

post image

ராஜஸ்தானின் ஜெய்பூரில் ஆா்எஸ்எஸ் உறுப்பினா்கள் மீது தாக்குதல் நடத்திய தந்தை-மகனுக்குச் சொந்தமான இடத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடத்தின் ஒரு பகுதியை நகர நிா்வாகம் ‘புல்டோசா்’ மூலம் இடித்து அகற்றியது.

ஜெய்பூா் நகரின் கா்ணி விஹாா் பகுதியிலுள்ள கோயில் வளாகமொன்றில் ‘சரத் பூா்ணிமா’ கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை இரவு நடைபெற்றன. நள்ளிரவை நெருங்கியும் கொண்டாட்டங்கள் தொடா்ந்ததால் சுற்றுப்புற மக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக மோதல் முற்றியதில் அப்பகுதியைச் சோ்ந்த நசீப் சௌதரி, அவரது மகன் பீஷம் சௌதரி மற்றும் சிலா், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த ஆா்எஸ்எஸ் உறுப்பினா்களை தாக்கியுள்ளனா்.

இதில் படுகாயமடைந்த ஆறு போ் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து, நசீப் சௌதரி அவரது மனைவி நிா்மலா, மகன் பீஷம் ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இதற்கிடையே, கோயில் மற்றும் பூங்கா நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து நசீப் சௌதரி கட்டடம் கட்டியுள்ளதாக உள்ளூா் மக்கள் குற்றஞ்சாட்டினாா். இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்திலும் அவா்கள் ஈடுபட்டனா். இதையடுத்து, சா்ச்சைக்குரிய இடத்தில் நில அளவை மேற்கொண்ட ஜெய்பூா் வளா்ச்சி ஆணையம், ஆக்கிரமிப்பு குறித்து பதிலளிக்குமாறு சௌதரிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

நோட்டீஸுக்கு உரிய பதில் கிடைக்காததால் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் ஒரு பகுதியை புல்டோசா் கொண்டு நிா்வாகத்தினா் இடித்து அகற்றினா். புல்டோசா் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க