செய்திகள் :

இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தில் மாற்றம் இருக்காது: ரோஹித் சர்மா

post image

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதையும் படிக்க: 3 மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து அணியை மதிப்பிட முடியாது: ரோஹித் சர்மா

மீண்டு வருவோம்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு சிறப்பாக விளையாடி தொடரைக் கைப்பற்றியது போன்று நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: சில நேரங்களில் இதுபோன்ற ஆட்டங்களை கடந்து வர வேண்டியிருக்கும். தோல்வியிலிருந்து முன்னேறி இந்திய அணி முன்னோக்கிச் செல்லும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியடைந்தது. அதன் பின், தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றினோம்.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி!

முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆட்டமிழப்போம் என எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டு மீண்டு வந்தோம். இரண்டாவது இன்னிங்ஸில் சில பார்ட்னர்ஷிப்புகள் இந்திய அணிக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் விளையாடுகையில் அணி வீரர்கள் இருக்கை நுனிகளில் அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தோம். இளம் வீரர்களான இருவரும் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. சர்ஃபராஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றார்.

அதிரடி ஆட்டத்தில் மாற்றம் இருக்காது

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும் இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தில் மாற்றம் இருக்காது எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு போட்டி சரியாக அமையவில்லை என்பதற்காக, அதிரடியாக விளையாடுவதில் மாற்றம் செய்யப்போவதில்லை. போட்டியில் அச்சமின்றி விளையாடுவதை தொடர்வோம். அண்மையில் நடைபெற்ற சில போட்டிகளில் நாங்கள் அப்படிதான் விளையாடினோம். இனிவரும் போட்டிகளிலும் அதனைத் தொடர்வோம் என்றார்.

இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் டிராவிஸ் ஹெட்; காரணம் என்ன?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி புணேவில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

முதல் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது நியூசிலாந்து!

நியூசிலாந்து மகளிரணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி துபையில் உள்ள துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வலிமையான அணி இந்தியா: நியூசி. கேப்டன்

இந்தியாவுக்கு எதிராக 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இட... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்காவுக்கு 159 ரன்கள் இலக்கு; உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்?

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி துபையில் ... மேலும் பார்க்க

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: நியூசிலாந்து பேட்டிங்!

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் உள்ள... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலா... மேலும் பார்க்க