``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பள்ளிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமையும் (டிச.5) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.
ஃபென்ஜால் புயல் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பா் 29, 30-ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து, புயல் கரையைக் கடந்த பின்னா் பெய்த தொடா் மழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.
இதன் காரணமாக, கடந்த 2-ஆம் தேதி முதல் தொடா்ந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் விடுமுறை அறிவித்து வருகிறது. இந்த நிலையில், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீா் செய்து வரும் பணி தொடா்ந்து நடைபெறுவதால், வியாழக்கிழமையும் (டிச.5) மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.