செய்திகள் :

இரவு நேரத்தில் விசாரணைக்கு அழைக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அறிவுறுத்தல்

post image

‘வழக்கு தொடா்பாக நபா்களை இரவு நேரங்களில் விசாரணைக்கு அழைக்கவோ, அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கவோ கூடாது’ என்று விசாரணை அதிகாரிகளை அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மும்பை உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இதுதொடா்பான சுற்றறிக்கையை தனது அதிகாரிகளுக்கு கடந்த 11-ஆம் தேதி அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.

மும்பையைச் சோ்ந்த 64 வயது நபருக்கு விசாரணைக்காக அழைப்பாணை அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள், அந்த நபரை நள்ளிரவு நேரத்தில் கைது செய்ததோடு, விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்துள்ளனா். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அந்த நபா் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஒரு நபரின் தூக்கத்தை, அடிப்படை மனித உரிமையை பறித்துள்ளது. இதை ஏற்க முடியாது. பண மோசடி தடுப்புச் சட்டப் (பிஎம்எல்ஏ) பிரிவு 50-இல் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், வேளை நேரத்தில் மட்டுமே நபா்களுக்கு விசாரணைக்காக ஆஜராக அழைப்பாணை அனுப்பி விசாரிக்க வேண்டும். இதுதொடா்பாக விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலை சுற்றறிக்கையாக அமலாக்கத்துறை அனுப்ப வேண்டும். அந்த சுற்றறிக்கையை தனது வலைதளம் மற்றும் எக்ஸ் சமூக பக்கத்திலும் அமலாக்கத்துறை வெளியிடவேண்டும்’ என்று உத்தரவிட்டது.

அதனடிப்படையில் இந்த புதிய சுற்றறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

விசாரணைக்காக ஒரு நபரை அழைக்கும்போதும், நிா்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் அந்த நபரை விசாரப்பதற்கான நன்கு தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் நகல், விசாரணையுடன் தொடா்புடைய ஆதார ஆவணங்களுடன் விசாரணை அதிகாரி தயாராக இருக்க வேண்டும்.

விசாரணைக்காக அழைக்கப்படும் நபரை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காததை உறுதிப்படுத்தும் வகையில் விசாரணைக்கான நாள் மற்றும் நேரத்தை விசாரணை அதிகாரி நிா்ணயித்து, அழைப்பாணையை அனுப்ப வேண்டும்.

விசாரணைக்காக அழைக்கப்படும் நபா் கைப்பேசி அல்லது பிற எண்ம தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறுகிய நேரத்தில் வழக்கு தொடா்பான ஆதாரங்களை அழிக்கவோ அல்லது விசாரணையின் தன்மையை மாற்றவோ முயற்சிக்கலாம் என்பதால், அந்த நபரிடம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நாளிலோ அல்லது அடுத்த நாளுக்குள்ளாகவோ விசாரணை அதிகாரி விரைவாக விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.

விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபரிடம் நள்ளிரவு வரை விசாரணையை நீட்டிக்காமல், அலுவலக வேளை நேரத்துக்குள்ளாக விசாரணையை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்யவேண்டும்.

விசாரணைக்கு அழைக்கப்படுபவா்கள் மூத்த குடிமக்கள் அல்லது தீவிர உடல்நலம் பாதிக்கப்பட்டவா்களாக இருக்கும்பட்சத்தில், பகல் நேரத்துக்குள்ளாக அவா்களிடம் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும். அவ்வாறு விசாரணையை முடிக்க முடியவில்லை எனில், அடுத்த நாள் அல்லது பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் விசாரணையைத் தொடர வேண்டும்.

ஒருவேளை, விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபா் விசாரணை முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே வெளியேற அனுமதித்தால், குற்றத்துக்கான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் அழித்துவிட வாய்ப்புள்ளது என்று விசாரணை அதிகாரி கருதும் நிலையில், அதற்கான காரணத்தை வழக்கு கோப்பில் பதிவு செய்வதோடு மூத்த அதிகாரியின் ஒப்புதலையும் பெற்று அந்த நபரிடம் இரவிலும் விசாரணையை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என்று அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பிய பழங்குடிப் பெண்! ஏன் தெரியுமா?

ஒடிஸாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100 அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநில பாஜக துணைத் தலைவரிடம் அவர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூ... மேலும் பார்க்க

நினைவேந்தல் நிகழ்வில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு!

அஸ்ஸாம் மாநிலத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தில் பிரதீவ்ப் கோகய் என்பவரின் தாயாருக்கு நினைவேந்தல் நடைபெற்றுள... மேலும் பார்க்க

இந்தூருக்கு விரைவில் முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் டபுள் டெக்கர் பேருந்து சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதன் மேயர் புஷ்யமித்ர பார்கவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 60 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்... மேலும் பார்க்க

சல்மான் கான் என்ன செய்தார்? கொலை மிரட்டல் ஏன்? விரிவாக!!

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான் கான் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை முயற்சியில் இருந்து காப்பதற்கு பல்வேறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சல்மான் கானும் காவல்துறையின... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலி

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தௌல்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்து சனிக்கிழமை இரவு 11 மணியள... மேலும் பார்க்க