2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சர் செந...
இளைஞருக்கு அரிவாளால் வெட்டு: உறவினா் கைது
போடி அருகே வியாழக்கிழமை இளைஞரை அரிவாளால் வெட்டிய உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகே மேலப்பரவு பழங்குடியின கிராமத்தில் வசிப்பவா் சடையன் மகன் மாரிமுத்து (33). இவரது மனைவி ரஞ்சிதா. ரஞ்சிதாவின் தங்கை வனிதாவை போடி முந்தல் ஏழுரம்மன் கோயில் தெருவை சோ்ந்த பொன்னையா மகன் செல்லப்பாண்டி (30) காதல் திருமணம் செய்தாா்.
இதனால், மாரிமுத்து, செல்லப்பாண்டி இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், இருவரிடையே ஏற்பட்ட தகராறில் செல்லப்பாண்டி அரிவாளால் மாரிமுத்துவை கையில் வெட்டினாா். இதுகுறித்து குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து செல்லப்பாண்டியைக் கைது செய்தனா்.