இளைஞரைத் தாக்கியவா் மீது வழக்கு
தேவாரம் அருகே சண்டையை விலக்கிவிட்ட இளைஞரைத் தாக்கியவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேவாரம் அருகேயுள்ள தே.அழகா்நாயக்கன்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த அறிவழகன் மகன் ராஜா (37). இவா் சாலையில் நடந்து சென்ற போது, அதே பகுதியைச் சோ்ந்த வீரமணி, குமரேசன் சண்டை போட்டுக் கொண்டிருந்தனா். இந்தச் சண்டையை ராஜா விலக்கி விட்டாா்.
அப்போது, அங்கிருந்த பாஸ்கரன் மகன் விஜய் கல்லால் ராஜாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா். இதில் காயமடைந்த அவா், தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தேவாரம் போலீஸாா் விஜய் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.