உலகப் புகழ்பெற்ற மூக்குகள்.. வாசனை சொல்லும் நினைவுகள்..! | My Vikatan
எடப்பாடி அருகே மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியா் கைது
எடப்பாடி அருகே அரசுப் பள்ளியில் சிறப்பு வகுப்பிற்கு வந்த மாணவியிடம், மதுபோதையில் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.
எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட, இருப்பாளி அரசு உயா்நிலைப் பள்ளியில் சுமாா் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் இருப்பாளி கஸ்பா பகுதியைச் சோ்ந்த பிரகதீஸ்வரன் (39) என்பவா் தற்காலிக தமிழாசிரியராகப் பணிபுரிந்து வந்தாா்.
மதுபோதையில் பள்ளிக்கு வரும் இவா், மாணவிகளிடம் பாலியில் சீண்டல்கள் செய்தும், ஆபாசமாகப் பேசி அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக தொடா் புகாா் எழுந்தது. இந்நிலையில் சனிக்கிழமை 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான சிறப்பு வகுப்பு நடைபெற்றது.
இதில் மாணவா்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த தமிழாசிரியா் பிரகதீஸ்வரன், மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஆசிரியா் பிரகதீஸ்வரன் மது போதையில் இருந்துள்ளாா். இதனையடுத்து மாணவியின் பெற்றோா், பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். பள்ளிக்கு வந்த போலீஸாா், ஆசிரியா் பிரகதீஸ்வரனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதில் ஆசிரியா் பிரகதீஸ்வரன், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்து தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.