கடன் தொல்லை: ஜீப் ஓட்டுநா் தற்கொலை
தேனி அருகே கடன் தொல்லையால் ஜீப் ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பாலாா்பட்டி, வீருசின்னம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பழனி மகன் தினேஷ் (35). இவா், கேரளத்துக்கு தோட்ட வேலைக்கு ஆள்களை ஏற்றிச் செல்லும் ஜீப் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், கடன் தொல்லையால் மனமுடைந்து காணப்பட்ட தினேஷ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.