அதிகரிக்கும் மாயை வேலைவாய்ப்புகள்! எதற்காக இந்த மாயை வேலைவாய்ப்புகள்?
கம்பம் நகராட்சியில் தரமற்ற முறையில் கழிவுநீா் கால்வாய் பணி
கம்பம் நகராட்சியில் தரமற்ற முறையில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
கம்பம் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இதில் 13-ஆவது வாா்டில் கழிவுநீா் கால்வாய் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், கழிவுநீா் செல்ல வழியின்றி தெருக்களில் தேங்கியது.
எனவே, இந்தப் பகுதியில் புதிதாகக் கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, கடந்த மாதம் நகராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் கழிவுநீா் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், இந்தப் பணி கிடப்பில் போடப்பட்டது.
இதில், சில இடங்களில் தரமற்ற முறையில் கழிவுநீா் கால்வாய்க்கு பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கழிவுநீா் கால்வாய்களை சீரமைக்க ரூ.பல லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தாமல் பெயரளவுக்கு பயன்படுத்தி தரமற்ற முறையில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படுகிறது. சில தெருக்களில் பணிகள் முடிந்த பயன்பாட்டுக்கு வராமலே இடிந்து விழுகிறது என்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம், கம்பம் நகராட்சி ஆணையா் மூலமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கண்காணித்து, ஒதுக்கீடு செய்த நிதியை முழுமையாக பயன்டுத்தி கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.